நாளுக்கு நாள் யூத் ஆகிக்கொண்டே போகும் லெஜண்ட் சரவணன்... அவரின் ஒரிஜினல் வயசு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!
சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பின்னர் நாளுக்கு நாள் யூத் ஆகிக்கொண்டே போகும் நடிகர் லெஜண்ட் சரவணன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லெஜண்ட் என்றதுமே அனைவருக்கும் முதலில் ஞாபகத்துக்கு வருவது சரவணன் தான். மிகப்பெரிய தொழிலதிபரான இவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்கிற கடையை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்த சரவணன், தன்னுடைய வியாபார யுக்தியால் அசுர வளர்ச்சி கண்டு, இன்று முன்னணி தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக தொழிலதிபர்கள் புகழ் வெளிச்சத்தை விரும்பமாட்டார்கள். ஆனால் லெஜண்ட் சரவணன் அப்படியல்ல, விளம்பரங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் நடித்தால் தான் ரீச் ஆகும் என்கிற டிரெண்டை உடைத்த பெருமை லெஜண்ட் சரவணனையே சேரும். இவர் தன் கடை விளம்பரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தானும் பிரபலமானதோடு, தன் கடையையும் பிரபலமாக்கினார்.
தான் நடித்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆனதால், சரவணனுக்கு படிப்படியாக சினிமா ஆசையும் வந்தது. அதனை தி லெஜண்ட் படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் சரவணன். அவர் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்தாண்டு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக படக்குழுவே அறிவித்தது.
இதையும் படியுங்கள்... 2 மணிநேரத்தில் மலர்ந்த காதல்... சூப்பர்ஸ்டாரின் சூப்பரான லவ் ஸ்டோரி தெரியுமா?
லெஜண்ட் சரவணனின் நடிப்பை பலரும் ட்ரோல் செய்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். அப்படத்திற்காக அவர் புதிய தோற்றத்திற்கு மாறி உள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயினர். லெஜண்ட் படத்தில் தோன்றியதை விட படு யங்காக மாறிய சரவணனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இப்படி நாளுக்கு நாள் யூத் ஆகிக் கொண்டே செல்லும் நடிகர் லெஜண்ட் சரவணனின் ஒரிஜினல் வயசு என்ன என்பதை தெரிவித்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் 1970-ம் ஆண்டு பிறந்தவர், இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது. சரவணனுக்கு திருமண வயதில் ஒரு பொண்ணும் உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் இவ்வளவு வயதிலும் இப்படி யங் ஆக இருப்பதன் சீக்ரெட்டை அவரிடம் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மொத்த அழகையும் மூடி.. Matrix பட பாணியில் ஒரு சூப்பர் போட்டோஷூட் போட்ட நடிகை மிருணாள் தாகூர்!