- Home
- Cinema
- ஷாருக்கான் 'ஜவான்' படத்தின் தமிழ்நாடு - கேரளா திரையரங்கு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
ஷாருக்கான் 'ஜவான்' படத்தின் தமிழ்நாடு - கேரளா திரையரங்கு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
இந்தியா முழுதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான உள்ளது 'ஜவான்'. இந்த படத்தின் தமிழகம் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Jawan: Song 'Chaleya'
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜவான்' படத்தில் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஆக்ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படத்தில் இடம்பெற்ற ஷாருக்கானின் கலர் ஃபுல் பாடலான "வந்த எடம்" பாடல் , மற்றும் நயன்தாராவுடன் ஷாருக்கான் டூயட் பாடிய இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியாகி வைரலானது.
இந்த இரண்டு லிரிக்கல் பாடல்களுமே, வெளியான 24 மணிநேரத்தில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்த நிலையில், அனிருத்தின் இசையும் ரசிகர்கள் மனதை மயக்கியது. செப்டம்பர் 7-ஆம் தேதி 'ஜவான்' படம் வெளியாக உள்ளதால்... அவ்வப்போது இந்த படம் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அசோக் செல்வனுக்கு இந்த பெண் என்ன உறவு என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!
அந்த வகையில் தற்போது 'ஜவான்' படத்தின், தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஜவான் படத்தை கோகுலம் கோபாலனின் ஸ்ரீ கோகுலம் மூவிஸ், தான் இந்த படத்தின் திரையரங்கு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பும் மத்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.