அசோக் செல்வனுக்கு இந்த பெண் என்ன உறவு என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!
நடிகர் அசோக் செல்வனின் சகோதரி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் அசோக் செல்வனின் திருமண பேச்சு ஒருபக்கம், பரபரப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், இவருடைய சகோதரியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், சின்ன சின்ன ரோல்களில் நடிக்க கூட வாய்ப்பு கிடைக்காதா என... அலைந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் வாசல்களுக்கு, தன்னுடைய புகைப்படத்துடன் ஏறி இறங்கியவர் அசோக் செல்வன். ஆரம்பத்தில் பல போராட்டங்களை கடந்து, சில படங்களில் சைடு ஆர்டிஸ்டாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பல சோதனைகள் சுழற்றி அடித்த போதிலும் விடாமுயற்சியுடன் இவரின் தேடுதல் தொடர்ந்ததால், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'சூது கவ்வும்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த படத்தில் இவரின் நடிப்பு கவனிக்க படவே, இதை தொடர்ந்து, 'பீட்சா 2 வில்லா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் இந்த படம், தோல்வியை தழுவிய நிலையில்... இதை தொடர்ந்து வெளியான, 'தெகிடி' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதன் பின்னர், இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், சொல்லிக்கொள்ளும் படி வெற்றிபெறவில்லை என்றாலும்... 'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை' போன்ற படங்கள் அசோக் செல்வனுக்கு வெற்றியை கொடுத்தது.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் அசோக் செல்வன் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவரின் கைவசம் உள்ள நிலையில், அசோக் செல்வன் திருமணத்திற்கும் தயாராகியுள்ளார்.
அதன்படி, பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் அடுத்த மாதம் 13 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை இவர்களே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டுள்ளதாம்.
அசோக் செல்வனை தெரிந்த அளவுக்கு, ரசிகர்கள் யாருக்கும் அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களை பார்த்தது இல்லை. ஆனால் தற்போது முதல் முறையாக அசோக் செல்வன், அவரின் சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும்... உங்களை போலவே உங்களின் சகோதரியும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.