அட்ரா சக்க... ஆரம்பமாகும் 'பிக்பாஸ்' சீசன் 7! வெளியான முதல் டீசர்... மெளனமாக நின்று மாஸ் காட்டிய கமல்ஹாசன்!

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான, 'பிக்பாஸ்' சீசன் 7 டீசரை தற்போது விஜய் டிவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ராசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

kamalhaasan hosting biggboss season 7 first teaser launched

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் சீசன் துவங்கும் போது, பல்வேறு சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக கிளம்பிய நிலையில், அவை அனைத்தையும் சாமர்த்தியமாக பேசி சமாளித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிட் செய்தார் உலகநாயகன்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் விரைவில் துவங்கும் என கூறப்பட்டது. அதன்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட்டில் கமல் ஹாசன் கலந்து கொண்டதாகவும் விரைவில் ப்ரோமோ வெளியாகலாம் என கூறப்பட்டது. அந்த வகையில் இன்று மாலை 7:7  மணிக்கு பிக்பாஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புதிய டீசரை தற்போது விஜய் டிவி குழு வெளியிட்டுள்ளது.

kamalhaasan hosting biggboss season 7 first teaser launched

விஜய் டிவி சீரியல்களில் டாப் 10 TRP ரேட்டிங்கை கைப்பற்றிய சீரியல்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது!

கமலஹாசன் தண்ணீருக்கு நடுவே இருக்கும் பலகையில் நிற்பது போன்று, பின்னர் மௌனமாக சிரித்துக்கொண்டே பார்க்க தயாராக இருங்கள் என கைகளால் சைகை காட்டுகிறார். கமல்ஹாசன் பார்பவதற்கு மிகவும் ஸ்டைலிஷாக கோட் - சூட்டுடன் உள்ளார். மேலும் இந்த முறை பிக்பாஸ் லோகோ பூக்களின் வடிவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் மற்றும் கோல்டன் நிறத்தில் இது உள்ளது.

kamalhaasan hosting biggboss season 7 first teaser launched

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை..! சீட் பெல்ட் போட்டதால் தப்பித்தேன்! காயங்களுடன் வெளியிட்ட வீடியோ!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது டீசருடன் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த மாதத்தின் துவக்கத்திலேயே பிக் பாஸ் 7 ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள, சில பிரபலங்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி உள்ள பிக்பாஸ் சீசன் 7 டீசர் இதோ...

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios