MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் - விஜய் லிஸ்டுலையே இல்ல... கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி விருந்தாக வந்த படங்கள் என்னென்ன?

அஜித் - விஜய் லிஸ்டுலையே இல்ல... கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி விருந்தாக வந்த படங்கள் என்னென்ன?

2020-ஆம் ஆண்டு முதல் 2024 வரை தீபாவளிக்கு வெளியான மற்றும் வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். 

3 Min read
manimegalai a
Published : Oct 21 2024, 02:13 PM IST| Updated : Oct 21 2024, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Kollywood Actors Ajith Vijay and Rajinikanth

Kollywood Actors Ajith Vijay and Rajinikanth

தீபாவளி என்றாலே... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தான். சிறுவர்களுக்கு பட்டாசு, புத்தாடை மற்றும் பலகாரங்கள் பிடிக்கும் என்றால், பெரியவர்களுக்கு குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு ரசிக்கவும், மற்றவர்களுக்கு பலகாரங்கள் கொடுத்து அன்பை பரிமாறுவதும் பிடிக்கும். சினிமா ஆர்வலர்களுக்கு அவர்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை திரையரங்கில் பார்ப்பது வேறு லெவல் சந்தோசம் என கூறலாம். இது தான் அவர்களுக்கு உண்மையான தீபாவளி கொண்டாட்டமும் கூட.

ஆனால் கடந்த 5 வருடங்களாக தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரவில்லை. குறிப்பாக தளபதி விஜய், அஜித்குமார், கமல் போன்ற நடிகர்கள் தீபாவளி ரேஸில் இருந்து விலகியே உள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் அதுவும் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. 80-ஸ் மற்றும் 90-ஸ் காலகட்டத்தில், தீபாவளி என்றாலே கண்டிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்கிற கலாச்சாரமே தற்போது மாறியுள்ளது. சரி கடந்த 5 வருடங்களில் தீபாவளிக்கு வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

28
Soorarai pottru

Soorarai pottru

2020-ஆம் ஆண்டு தீபாவளி (நவம்பர் 14) ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில், கொரோனாவின் முதல் அலை தமிழ் நாட்டை ஆட்டி படைத்து, கொஞ்சம் கொஞ்சம் தணிந்து கொண்டிருந்த நேரம் என்பதால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி திரையரங்குகள் திறக்கப்பட்டன. பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகாத நிலையில், நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தான் நடித்து - தயாரித்த 'சூரரை போற்று' திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிட்டார். அதே போல் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 14-ஆம் தேதி வெளியானது.

ரஜினி முதல் தனுஷ் வரை; அசிங்கப்படுத்தியவர் முன்பு வளர்ந்து தரமான ரிவெஞ் கொடுத்த 3 பிரபலங்கள்!

38
2021 Diwali theatre Release

2021 Diwali theatre Release

திரையரங்கில், இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த 'பிஸ்கோத்' படம் வெளியானது. சந்தானம் இந்த படத்தில் நான்கு வேடத்தில் நடித்திருந்தார். காமெடி லவ் டிராமாவாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. 

இதை தொடர்ந்து இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில், தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் 'இரண்டாம் குத்து'. இந்த படத்தில் ஹீரோவாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் நடிக்க, இரண்டாவது நாயகனாக டானியல் அன்னி போப் நடித்திருந்தார். ஹாரர் மற்றும் அடல்ட் காமெடி படமாக இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

48
Annaththa movie Release in 2022 Diwali

Annaththa movie Release in 2022 Diwali

2021-ஆம் ஆண்டு தீபாவளி நவம்பர் 4, ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்தா' திரைப்படம் வெளியானதால், திரையரங்கில் சூப்பர் ஸ்டார் படத்திற்கு சவால் கொடுக்கும் விதத்தில், விஷால் - ஆர்யா ஒன்றாக இணைந்து நடித்த எனிமி படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. அண்ணாத்த படம் பெருவாரியான திரையரங்குகளில் வெளியான போதிலும், விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது. அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து, இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.

அம்மா ஆகப்போகும் இந்திரஜா; வளைகாப்புக்கு முன் மகளுக்கு ரோபோ சங்கர் வாரி வழங்கிய சீர் இவ்வளவா?

58
JaiBhim Movie

JaiBhim Movie

அதே போல் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எனிமி' திரைப்படம் ஒன்றாக இருக்கும் நண்பர்கள் எப்படி எதிரிகளாக மாறுகிறார்கள் என்கிற எதிர்பாராத திருப்புமுனையுடன் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடித்திருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. ஓடிடியில் நேரடியாக சிவகுமார் நடித்த எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஹாட் ஸ்டரிலும், ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியானது.
 

68
Sardar 2 Movie Released in 2023 Diwali

Sardar 2 Movie Released in 2023 Diwali

2022-ஆம் ஆண்டு தீபாவளி அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் வெளியாகின.

கார்த்தி முதல் முறையாக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'சர்தார்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21-ஆம் தேதி வெளியானது. இந்த படம் காமெடி, காதல், ஆக்ஷன், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக ஜனரஞ்சகமான படமாக வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கூடிய விரைவில் கார்த்தி நடிக்க உள்ளார்.

அதே போல், நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. காமெடி ஜார்னரில் வெளியான இந்த படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படு தோல்வியை சந்தித்தது. 

செல்பி எடுத்தது குத்தமா? நாக சைதன்யா - சோபிதா ஜோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; காரணம் என்ன?

78
Jigarthanda DoubleX

Jigarthanda DoubleX

2023-ஆம் ஆண்டு தீபாவளி நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளியை குறிவைத்து நடிகர் கார்த்தி இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜப்பான் திரைப்படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தீபாவளியை குறிவைத்து நபவம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் தீபாவளி ரேஸில் கலந்து கொண்டு விக்ரம் பிரபுவின் ரெய்டு மற்றும் கிடா ஆகிய படங்கள் கவனிக்கப்படாமல் கடந்து சென்றன.

88
2024 Diwali Release Movie Amaran

2024 Diwali Release Movie Amaran

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31-ஆம் தேதி வர உள்ளது. இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி வெளியாகும் என கார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved