MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • sardar : நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் லைலா..கார்த்தியுடன் க்யூட் போட்டோஸ்

sardar : நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் லைலா..கார்த்தியுடன் க்யூட் போட்டோஸ்

 கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்தார் படம் மூலம் மீண்டும் ரீ - என்ட்ரி  கொடுக்கிறார்  லைலா...

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 17 2022, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

பாலிவுட் மூலம் அறிமுகமான லைலா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரை உலகை அடுத்தபடியாக தமிழில் அறிமுகமானார். முதன் முதலில் கள்ளழகர் என்னும் படத்தில் விஜயகாந்த் உடன் தோன்றியிருந்தார்.

29

இதை தொடர்ந்து ரோஜாவனம், முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, த்ரீ ரோஸஸ்  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். 

மேலும் செய்திகளுக்கு...rakul preet singh : சிவப்பு வண்ண உடையில் மனதை மயக்கும்..ரகுல் ப்ரீத் சிங்..நியூ லுக்

39

இவர் நடித்த ஹிட் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தவர் லைலா. இதை அடுத்து பாலாவின் பிதாமகன் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. சூர்யாவுக்கு ஜோடியாக வரும் லைலாவின் முதல் பாதியும் சரி, இரண்டாம் பாதியும் சரி பார்ப்பவர்களை பெரிதாக கவர்ந்தது.

 

49

இந்த படம் இவருக்கு ஃபிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து கம்பீரம், ஜெயசூர்யா, உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பரமசிவம், திருப்பதி, மகா சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

59

2006 இல் வெளியான திருப்பதி படத்தில் தான் இவர் இறுதியாக தோன்றியிருந்தார். அதே ஆண்டு தொழிலதிபரான மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 8 வருடங்கள் அவருடன் காதல் உறவில் இருந்தார் லைலா.

69
sardar

sardar

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து இருவரும் 2006-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோவன் மற்றும் ரோமன் என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமா திரை உலகில் இருந்து ஒதுங்கி விட்டார் லைலா.

79
sardar

sardar

இந்நிலையில்  கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சர்தார் படம் மூலம் மீண்டும் ரீ - என்ட்ரி  கொடுக்கிறார்  லைலா. முன்னதாக கடந்த ஆண்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர், கோகுலத்தில் சீதை உள்ளிட்டவற்றில் பங்கேற்று இருந்தார்.

89
sardar

sardar

லைலாவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எஸ்.பி மித்ரன் இயக்கும் இந்த படம் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. உளவாளி குறித்த கதைக்களம் தான் இந்த படத்தின் கதை என கூறுகிறார் கார்த்தி.

99
sardar

sardar

அதோடு போலீசாக இருக்கும் வேடம் மட்டுமே ஒரிஜினல் மற்ற வேடங்கள் அந்த போலீஸ் போடுவது என படத்தின் கதையை அப்பட்டமாகவும் தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதையொட்டி ப்ரோமோஷன் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கார்த்தி லைலாவுடன் ப்ரோமோஷன் பணிகளின் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image2
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image3
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved