காதலர் விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்தபடி நயன்தாரா... தாறுமாறு வைரலாகும் செல்ஃபி போட்டோஸ்...!
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒன்றாக தங்களை மாறி, மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க துவங்கிய போது, இருவருக்கு இடையிலும் பற்றிய காதல் தீ, தற்போது வரை கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடியின் கல்யாணம் எப்போது என்பது தான் கோலிவுட்டில் டாப் டாக்கே.
ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு, “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்” என விக்னேஷ் சிவன் பதிலளித்தது தாறுமாறு வைரலானது.
நயன்தாரா எங்கு சென்றாலும் விக்கி இல்லாமல் போவது கிடையாது. இப்ப எல்லாம் ஒரு படி மேலே போய் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறது இந்த காதல் ஜோடி.
வெளிநாட்டு டூர், ஷூட்டிங் ஸ்பார்ட், ஆன்மிக சுற்றுலா என கண்ட இடமெல்லாம் காதல் வளர்க்கும் இந்த ஜோடியின் ரொமான்டிக் செல்ஃபிக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமான விஷயம் தான்.
அப்படித்தான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒன்றாக தங்களை மாறி, மாறி செல்ஃபி எடுத்துக் கொண்ட போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்தபடி நின்றிருக்கும் இந்த செல்ஃபி போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
இப்படியெல்லாம் ரொமாண்டிக் போஸ் கொடுத்து முரட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றுவது விக்கிக்கு முதல் முறை என்றாலும், போட்டோ போஸ் கொடுப்பது எல்லாம் நல்லா தான் இருக்கும் சீக்கிரம் திருமண செஞ்சிக்கோங்க என கோரிக்கை வைப்பர்களின் எண்ணிக்கை தான் கூடிவிட்டது.