MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது கே.வி.ஆனந்த் மகள் திருமணம் - படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது கே.வி.ஆனந்த் மகள் திருமணம் - படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் கே.வி.ஆனந்த். இவர் கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த தென்மாவின் கொம்பத்து என்கிற மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து அவரை தமிழுக்கு அழைத்து வந்த இயக்குனர் கதிர் தான். அவர் இயக்கிய காதல் தேசம் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் கேவி ஆனந்த்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
KV Anand

KV Anand

இதையடுத்து நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கேவி ஆனந்த், சிவாஜி படத்துக்கு பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் பிருத்விராஜ் நடித்த கனா கண்டேன் படம் மூலம் இயக்குனரான கேவி ஆனந்துக்கு முதல் படம் பெரிய அளவில் வெற்றியை தராவிட்டாலும், இரண்டாவதாக அவர் இயக்கிய அயன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... ஹீரோவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் இதோ

34
KV anand

KV anand

பின்னர் கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வெற்றிகண்ட இவர் கடந்த 2021-ம் ஆண்டு மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தது தமிழ் திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்தது. இயக்குனர் கே.வி. ஆனந்துக்கு சினேகா, சாதனா என இரண்டு மகள்களும் உள்ளனர். 

44

இந்நிலையில், கே.வி.ஆனந்தின் மகள் சாதனாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அவர் விஷ்ணு ராஜ் என்பரை கரம்பிடித்து உள்ளார். இவர்கள் இருவருமே ஆர்கிடெக்ட் படித்தவர்கள் தான். இவர்களது திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இன்று மாலை இத்தம்பதியினரின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... 13 வருஷத்துக்கு முன் சொதப்பிய விஷயத்தை... விடாமுயற்சி படத்துக்காக மீண்டும் கையிலெடுக்கும் அஜித் - செட் ஆகுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved