MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஹீரோவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் இதோ

ஹீரோவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் இதோ

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2023, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ethirneechal

ethirneechal

கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களங்களுடன் விதவிதமான திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தாலும், சின்னத்திரை சீரியல்களுக்கான மவுசு என்பது இன்றளவும் குறைந்தபாடில்லை. சொல்லப்போனால், முன்பை விட தற்போது தான் சீரியலுக்கான வரவேற்பு அதிகரித்து இருக்கிறது என புள்ளிவிவரங்களும் சொல்கின்றன. முன்பெல்லாம் சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் தான் பார்ப்பார்கள் என்கிற டிரெண்ட் மாறி தற்போது இளைஞர்களும் ஆவலோடு பார்க்கும் அளவுக்கு சீரியல்களின் கதைக்களங்கள் மாறி விறுவிறுப்படைந்துவிட்டன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்படும் அளவுக்கு அதற்கான மவுசு எகிறி உள்ளது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும், சமகால டிரெண்டை மையப்படுத்தியும் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருவதால் அதற்கு அதிக அளவில் வரவேற்பும் கிடைத்து வருகின்றது.

36

அந்த வகையில், தற்போது டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். கடந்த ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மிகவும் பாப்புலர் ஆனதற்கு காரணம் அதன் கதாபாத்திர தேர்வு மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் தான். அதிலும் குறிப்பாக நடிகர் மாரிமுத்து நடிக்கும் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மிகுந்த அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... 13 வருஷத்துக்கு முன் சொதப்பிய விஷயத்தை... விடாமுயற்சி படத்துக்காக மீண்டும் கையிலெடுக்கும் அஜித் - செட் ஆகுமா?

46

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே இவர் எதிர்நீச்சல் சீரியலில் பேசிய டயலாக்குகள் தான் மீம் டெம்பிளேட்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு மக்களின் மனநிலையோடு ஒன்றிப்போகும் வகையில் அவர் பேசும் டயலாக்குகள் அமைந்துள்ளன. இதுதவிர பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, விபு ராமன், கமலேஷ், சபரி பிரசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த தொடரையும் இயக்கி வருகிறார்.

56

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் வில்லத்தனமான நடிப்பால மிரட்டி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. சொல்லபோனால் இதில் ஹீரோவாக நடிக்கும் சபரியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்குகிறார் மாரிமுத்து. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

66
ethirneechal

ethirneechal

மாரிமுத்துக்கு அடுத்தபடியாக மதுமிதா, கமலேஷ், ஹரிப்பிரியா ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரமும், சக்தி, கனிகா ஆகியோருக்கு ரூ.12 ஆயிரமும், சபரி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரமும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... அஜித் உடனான காதல் திருமணத்துக்கு பின் ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம் - எது தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved