MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் உடனான காதல் திருமணத்துக்கு பின் ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம் - எது தெரியுமா?

அஜித் உடனான காதல் திருமணத்துக்கு பின் ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம் - எது தெரியுமா?

நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி, திருமணத்திற்கு பின் நடித்த ஒரே ஒரு தமிழ் படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
shalini

shalini

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் ஹீரோயினாக குறுகிய காலம் மட்டுமே நடித்தாலும், அந்த காலகட்டத்தில் நடித்த படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த காதலுக்கு மரியாதை, அஜித்துக்கு ஜோடியாக நடித்த அமர்க்களம் ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
shalini Ajithkumar

shalini Ajithkumar

நடிகை ஷாலினியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது அமர்க்களம் தான். ஏனெனில் அப்படத்தின் போது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த படத்தின் நடித்து முடித்த அடுத்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அஜித்தை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகிய ஷாலினி, இன்று வரை கம்பேக் கொடுக்கவே இல்லை.

இதையும் படியுங்கள்... தீவிரமான கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய சுதீப் - ரியல் ஹீரோ என பாராட்டும் ரசிகர்கள்

34
Shalini

Shalini

நடிகர் அஜித் - நடிகை ஷாலினி ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதிலேயே முழு கவனம் செலுத்தி வரும் ஷாலினிக்கு சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஐடியா சுத்தமாக இல்லையாம். இந்த நிலையில், அஜித் உடனான திருமணத்துக்கு பின்னர் நடிகை ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ் படம் பற்றி தற்போது பார்க்கலாம்.

44

திருமணத்துக்கு பின்னர் ஷாலினி நடித்த ஒரே ஒரு தமிழ்படம், ‘பிரியாத வரம் வேண்டும்’ என்கிற படம் தான். இப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி. நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இறுதியில் காதலர்கள் ஆவதே படத்தின் கதையாகும். நிறம் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் வசூலிக்கவில்லை என்றாலும், இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் இப்படத்திற்கு தனி மவுசு இருந்து தான் வருகிறது.

இதையும் படியுங்கள்... kissing day: முத்தத்திற்கு பெயர்போன கமல் முதல் ஒரே ஒருமுறை லிப்கிஸ் அடித்த வடிவேலு வரை; தமிழ்பட கிஸ் சீன்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved