- Home
- Cinema
- என்னது கமல்ஹாசன் ஒரே நேரத்துல 6 ஹீரோயின்களை காதலிச்சாரா? - பிரபல நடிகை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்
என்னது கமல்ஹாசன் ஒரே நேரத்துல 6 ஹீரோயின்களை காதலிச்சாரா? - பிரபல நடிகை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஒரே நேரத்தில் 6 ஹீரோயின்களை காதலித்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை குட்டி பத்மினி தற்போது யூடியூப் சேனல் தொடங்கி, அதில் தன்னுடைய திரை அனுபவம் குறித்தும், தன்னுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் குறித்தும் பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு வீடியோவில், நடிகர் கமல்ஹாசன் ஒரே நேரத்தில் 6 ஹீரோயின்களை காதலித்து வந்தது குறித்து பேசி உள்ளார். அதில் ஸ்ரீவித்யா கமலை உருகி உருகி காதலித்தது பற்றியும் பேசி இருக்கிறார். அதில் அவர் என்ன பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
அவர் கூறியதாவது : “ஸ்ரீவித்யா போன்ற அழகான நடிகையை நான் பார்த்ததே இல்லை. அவருடைய கண் அவ்வளவு அழகாக இருக்கும். கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்த ஸ்ரீவித்யாவுக்கு, ஒரு கட்டத்தில் கமல் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அந்த காலத்தில் கமலை விரும்பாத நடிகைகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கமலின் ரசிகைகளாகவே பெரும்பாலான நடிகைகள் இருந்து வந்தனர். அப்படித்தான் ஸ்ரீவித்யாவும் கமலின் நடிப்பை பார்த்து, அவர்மீது பைத்தியக்காரத்தனமாக காதலையும் வைத்திருந்தார்.
நான் கமலுடன் தெலுங்கு படமொன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது, கமல் வாணி கணபதியை காதலித்துக்கொண்டிருந்தார். அதேபோல் இந்தி நடிகை ரேகாவையும் கமல் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. இதனால் இந்த காதல், கீதல்லாம் வேண்டாமென்று ஸ்ரீவித்யாவை நான் எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்த டைம்ல ஸ்ரீவித்யா, வாணிகணபதி, ஜெயசுதா, பாலிவுட் நடிகை ரேகா மற்றும் 2 நடிகைகள் என 6 நடிகைகளை ஒரே நேரத்தில் காதலித்தார் கமல். அத்தனை பேரையும் எப்படி சமாளிச்சார்னு தெரியல. அதனால தான் அவருக்கு சகலகலா வல்லவன்னு பேர் வந்திருக்கும்னு நினைக்குறேன்.
இதையும் படியுங்கள்... ஒரு காட்சியில் கூட கேரளாவை தவறாக காட்டவில்லை... ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி அடா ஷர்மா எக்ஸ்குளூசிவ் பேட்டி
எல்லோரையும் காதலித்துவிட்டு கடைசியில் வாணி கணபதியை கமல் திருமணம் செய்துகொண்டதால் ஸ்ரீவித்யா மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்த காதல் தோல்வியில் இருந்து அவர் மீண்டு வர பல ஆண்டுகள் ஆனது. பின்னர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார் ஸ்ரீவித்யா.
பின்னர் ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவர், தன் கடைசி காலத்தில் கமல்ஹாசனை பார்க்க விரும்பினார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கமல்ஹாசனும் நேரில் சென்று ஸ்ரீவித்யாவை சந்தித்துவிட்டு வந்தார். 2006-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் ஸ்ரீவித்யா மரணமடைந்தார்” என குட்டி பத்மினி கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... வந்தியதேவனை பார்க்க ஜப்பானில் இருந்து கிளம்பிவந்த ரசிகர்கள் - விஷயம் தெரிந்து கார்த்தி தந்த வேறலெவல் சர்ப்ரைஸ்