இதுக்காக தான் வெளியில போறதே இல்ல..! குட்டி நயன் அனிகாவை பீல் பண்ண வைத்த ரசிகர்கள்!
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக புரோமோஷன் ஆகியுள்ள குட்டி நயன் அனிகா ஏன் அதிகம் வெளியில் செல்வதில்லை என, தன்னுடைய சோகத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.
சமீபத்தில் வெளியான 'குயின்' தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இளம்வயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். மற்றொருபுறம் மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.
16 வயதே அனிகா சுரேந்திரன் கொஞ்சம் கிளாமராக வெளியிடும் போட்டோக்களுக்கே ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம்.
அதனை சரி செய்ய கியூட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களையும், ரசிகர்களையும் கவர்ந்து விடுவார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏன் அதிகம் வெளியில் வருவதில்லை என்று பீல் பண்ணி கூறியுள்ளார்.
இவரை பார்க்கும் ரசிகர்கள், 'விஸ்வாசம்' திரைப்படத்தில் நன்றாக நடித்துள்ளதாக பாராட்டுகின்றார்களாம்.
அதே நேரத்தில் தன்னை பார்க்கும் பலரும் என்னிடம் நான் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறேன் என்றும் இன்னும் நான் வளர வேண்டும் என்று சொல்வதால் தான் வெளியில் கூட நான் வருவதில்லை என சோகத்தோடு தெரிவித்துள்ளார்.