மாலத்தீவு போனதும் கிளாமர் ரூட்டுக்கு தாவிய அனிகா... நீச்சல் உடையில் குட்டி நயன் நடத்திய மஜாவான போட்டோஷூட் இதோ
ரசிகர்களால் செல்லமாக குட்டி நயன் என அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரன் மாலத்தீவில் நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
anikha surendran
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இவரை தமிழுக்கு கொண்டு வந்தது கவுதம் மேனன் தான். அவர் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா. அப்படத்தில் அனிகாவின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்தன.
anikha surendran
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படத்தில் குட்டி நயன்தாராவாக நடித்திருந்தார் அனிகா. பின்னர் ஜெயம் ரவியின் தங்கையாக மிருதனில் நடித்த அவர், விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாராவின் மகள் கதாபாத்திரத்திற்கு அனிகா கச்சிதமாக பொருந்தி இருந்ததால், ரசிகர்கள் அவரை செல்லமாக குட்டி நயன் என அழைக்கத் தொடங்கினர்.
இதையும் படியுங்கள்... சிம்பு, விஷால் உள்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் - பின்னணி என்ன?
anikha surendran
எப்படா 18 வயது ஆகும் என்று காத்திருந்த அனிகா, 18 வயது ஆனதும் சட்டென கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார். இனி குழந்தை வேடத்தில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்த அனிகா, நடிச்சா ஹீரோயின் தான் என இருந்தார். இந்த வேளையில், அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி இந்த ஆண்டு அவர் ஹீரோயினாக நடித்த புட்ட பொம்மா மற்றும் ஓ மை டார்லிங் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.
anikha surendran
இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் சமீபத்தில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ஜாலியாக பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் அண்மையில் வெளியான நிலையில், தற்போது கடற்கரை ஓரம் நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார் அனிகா. அனிகாவின் நீச்சல் உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே... சினிமா பிரபலங்களின் தந்தையர் தின ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ