அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா கஸ்டடி நாயகி கீர்த்தி ஷெட்டி? - அவரே அளித்த ஷாக்கிங் விளக்கம்
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. இவர் தெலுங்கில் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆன உப்பென்னா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. உப்பென்னா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார். இப்படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்கி வருகிறார் பாலா. கீர்த்தி ஷெட்டியும் அதிக சம்பளம் கேட்டதால் அவரையும் விலக்கி விட்டு புதுமுக நடிகையை அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... தியேட்டர் பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் நயன்தாரா..! சென்னையில் மல்டிபிளக்ஸ் கட்டும் லேடி சூப்பர்ஸ்டார்
இதனால் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த வாரியர் திரைப்படம் தான் கீர்த்தி ஷெட்டிக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது. அப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. வாரியர் படத்தின் தோல்விக்கு பின்னர் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. இப்படமும் அண்மையில் வெளியாகி பிளாப் ஆனது.
வாரியர், கஸ்டடி மட்டுமின்றி தெலுங்கிலும் கீர்த்தி ஷெட்டி கடைசியாக நடித்த 2 படங்கள் தோல்வி அடைந்ததால், ராசியில்லாத ஹீரோயின் என்கிற பெயரையும் பெற்றுள்ளார் கீர்த்தி ஷெட்டி. இருப்பினும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஜீனி என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் கீர்த்தி ஷெட்டி.
இதனிடையே நடிகை கீர்த்தி ஷெட்டி, அழகை மெருகேற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து முதன்குறையாக மனம்திறந்து பேசி உள்ளார் கீர்த்தி ஷெட்டி. அதன்படி அவர் கூறியதாவது : “நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதால் உப்பென்னா படத்தில் இருந்தது போல் என் முகம் இல்லை என்கிறார்கள். நடிகைகள் மேக்-அப் போடுவதால் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். வயசு அதிகரிக்க, அதிகரிக்கவும் உடலில் மாற்றங்கள் ஏற்படும்” எனக்கூறி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 'மாடர்ன் லவ் சென்னை' தொடரில் ஷோபாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்த... நடிகை ஸ்ரீ கௌரி பிரியா போட்டோஸ்!