வசூல் மழையில் பாலாவின் காந்தி கண்ணாடி – 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
Gandh Kannadi Movie Box Office Collection Day 2 : முதல் முறையாக பாலா ஹீரோவாக நடித்து வெளியான காந்தி கண்ணாடி படமானது 2 நாட்களில் எத்தனை கோடி வசூல் குவித்துள்ளது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உதவி செய்யும் மக்களின் கதாநாயகனாக வலம் வந்த பாலாவின் முதல் படமான காந்தி கண்ணாடி படத்தில் கதாநாயகனாக வெற்றி அடைந்தாரா, இல்லையா என்பதை இந்த பாக்ஸ் ஆபிஸ் வசுலே சொல்கிறது. இயக்குநர் செரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வினின் துள்ளலான இசையில் கடந்த 5ம் தேதி வெளியான படம் தான் காந்தி கண்ணாடி. சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் காட்டி ஆகிய படங்களும் 5ஆம் தேதி வெளியான நிலையில் இந்த 2 படங்களுமே அதிக திரையரங்குகளை பிடித்துவிட்டன.
அதையும் மீறி பாலாவின் காந்தி கண்ணாடி படம் வசூலில் சாதனை படைப்பது என்பது அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனால், குக் வித் கோமாளி மூலமாக பெற்ற மக்களின் ஆதரவு மற்றும் உதவி செய்யும் குணம் இந்த 2 காரணத்திற்காகவே பாலாவின் காந்தி கண்ணாடி படமான எந்தவித பப்பிளிசிட்டியும் இல்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது. தன் மனைவி தான் உலகம் என்று வாழும் காந்தி (பாலாஜி சக்திவேல்) மற்றும் கண்ணம்மா (அர்ச்சனா) இருவரும் ஒரு திருமணத்திற்கு செல்கின்றனர். கண்ணம்மா அந்த திருமணத்தை பார்த்த பிறகு தனக்கும் அந்த 60ம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதை கவனித்த காந்தி, கதிராக நடித்து இருக்கும் கேபிஒய் பாலாவிடம் தெரிவிக்கிறார். கேபிஒய் பாலா இப்படத்தில் விழா ஏற்பாடு செய்யும் ஆர்கனைசராக செயல்படுகிறார்.
கேபிஒய் பாலா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறுபதாம் கல்யாண திருமணத்திற்கு ரூ.80 லட்சம் வரையில் செலவாகும் என கூறுகிறார். இதன் காரணமாக பணம் திரட்டுவதற்காக காந்தி தன்னிடம் உள்ள பழைய சொத்தை விற்க முயல்கிறார், அதை ஒரு கார்ப்பெரேட் கம்பெனி பிரச்சனை செய்கிறது. காந்தி இந்த பணத்தை எப்படி ஏற்பாடு செய்து, தன் மனைவியின் அறுபதாம் கல்யாண ஆசையை நிறைவேற்றுகிறார் என்பது தான் படத்தோட மீதி கதை.
கதிராக நடித்து இருக்கும் கேபிஒய் பாலா திருந்தி காந்தி மற்றும் கண்ணம்மாவுக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதும், முதுமையிலும் தன் மனைவியை காதலித்து அவள் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் காந்தி கதாபாத்திரமும், இப்படத்தில் வரும் ரோட்டில் டான்ஸ்ம் கிளைமெக்ஸில் இயக்குநர் செரீஃப் ரசிகர்கள் மனதில் இத்திரைப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.
விவேக் மெர்வின் இசை இப்படத்திற்கு மேலும் எமோஷன்களை சேர்த்து கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தில் கதாநாயனாக நடித்த கேபிஒய் பாலா இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆழாக இடத்துள்ளார். இனி வரும் காலங்களில் அவருக்கான பட வாய்ப்புகள் கிடைத்து சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் கடுமையான போராட்டத்திற்கு பிறகு திரைக்கு வந்த இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.35 லட்ச, வசூல் செய்துள்ளது என்றும், 2ஆவது நாளில் ரூ.45 லட்சம் வசூல் செய்துள்ளது என்றும் சாக்னிக் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மொத்தமாக காந்தி கண்ணாடி பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 லட்சம் வரையில் வசூல் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.