MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆண்கள் ஆட்சி செய்த தமிழ் சினிமா; தடைகளை உடைத்து முன்னேறிய முதல் பெண் இயக்குனர் - யார் தெரியுமா?

ஆண்கள் ஆட்சி செய்த தமிழ் சினிமா; தடைகளை உடைத்து முன்னேறிய முதல் பெண் இயக்குனர் - யார் தெரியுமா?

Kollywood First Woman Director : தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் தொட்டு ஆண்களுக்கு இணையான திறமையோடு பெண்களும் பல துறைகளில் பெரும் சாதனைகள் படைத்து வருகின்றனர்.

2 Min read
Ansgar R
Published : Oct 12 2024, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kollywood heroines

Kollywood heroines

இயற்கையிலேயே ஒரு பெண் என்பவர் மனரீதியாக, பல உடல் ரீதியாக பலமாக உள்ள ஆண்களை விட வலிமை பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. சினிமாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழ் சினிமா கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய பயணத்தை ஆரோக்கியமாக மேற்கொண்டு வருகிறது என்றால், அதில் எத்தனையோ கலைஞர்களின் முயற்சியும் அர்ப்பணிப்பும் அடங்கி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் ஆண்களின் ஆதிக்கம் மட்டுமே அதிகம் இருந்த நேரத்திலும் கூட, தங்களுடைய அசாத்திய திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி தனக்கு ஏற்பட்ட பல தடைகளை தாண்டி சாதித்து முதல் பெண் இயக்குனராக மாறியிருக்கிறார் ஒருவர், அவர் குறித்து இந்த பதிவில் காணலாம்.

எலிமினேஷனில் திடீர் திருப்பம்; பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

24
Sudha Kongara

Sudha Kongara

உண்மையில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு பல பெண் இயக்குனர்கள் இப்போது தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரோகினி, ஸ்ரீபிரியா, ரேவதி, காயத்ரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சுதா கொங்காரா என்று பல சிறந்த பெண் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய புகழோடு வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையல்ல.

34
TP Rajalakshmi

TP Rajalakshmi

இன்னும் சொல்லப்போனால் பல ஆண் இயக்குனர்களை ஒப்பிடும் பொழுது அவர்களை விட மிகவும் திறன் பட திரைப்படங்களை இயக்கி பெண்கள் பெரிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இவை அனைத்திற்கும் முதல் முதலில் அஸ்திவாரம்போட்டது டி.பி ராஜலக்ஷ்மி என்கின்ற மாபெரும் நடிகை தான். கடந்த 1911ம் ஆண்டு கும்பகோணத்திற்கு அருகே உள்ள சாலியமங்கலம் என்கின்ற ஊரில் பிறந்தவர் இவர். தனது 11வது வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக திருமண பந்தத்தில் இணைகிறார். 

ஆனால் எளிமையான குடும்பம் என்பதால் சரியாக வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில், ராஜலட்சுமி மீண்டும் அவர்களுடைய குடும்பத்தினரிடமே அனுப்பி வைக்கின்றனர் கணவர் வீட்டில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் வறுமை உச்சிக்கு செல்ல, திருச்சிக்கு பிழைப்பு தேடி குடும்பத்தோடு இடம்பெயர்ந்தார் ராஜலட்சுமி. இளம் வயதிலேயே பாட்டும், நடிப்பும் இவருடைய ரத்தத்தில் ஊறி இருந்திருக்கிறது. திருச்சி சென்றதும் பிரபல நாடக சபா ஒன்றில் இணைந்து நடிகையாக மாறுகிறார். இந்த சூழலில் நான் ராஜலட்சுமிக்கு 20 வயது இருக்கும் பொழுது, தன்னுடன் நடித்து வந்த டிவி சுந்தரம் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.

44
Rajalakshmi

Rajalakshmi

1929ம் ஆண்டு தமிழில் வெளியான "கோவலன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக நடிகையாக மாறிய ராஜலட்சுமி, வெகு சில ஆண்டுகளில் முன்னணி நடிகையாக உருவெடுக்கிறார். இன்றளவும் காலத்தால் அழியாத "காளிதாஸ்", "ராமாயணம்", "சாவித்திரி சத்தியவான்", "வள்ளி திருமணம்" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்தது ராஜலட்சுமி தான். இந்த சூழலில் தான் கடந்த 1936 ஆம் ஆண்டு தன்னுடைய மகள் கமலாவின் பிறப்பை கொண்டாடும் வகையில் "மிஸ் கமலா" என்கின்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்து முதல் பெண் இயக்குனராக தமிழ் திரை அரங்கில் அலங்கரித்தார் டிபி ராஜலக்ஷ்மி. 

கடந்த 1950 ஆம் ஆண்டு வரை நடிகையாக வலம் வந்த இவர் இறுதியாக "இதய கீதம்" என்கின்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிக்காத நிலையில் 1964 ஆம் ஆண்டு தன்னுடைய 53 வது வயதில் ராஜலட்சுமி காலமானார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருடைய மரணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவில் "சினிமா ராணி" என்கின்ற பட்டத்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவருக்கு சூட்டி மகிழ்ந்தார்.

ரஜினியை மட்டும் கொண்டாடவே பகத் பாசில் கேரக்டரை குளோஸ் பண்ணிய இயக்குநர் டி ஜே ஞானவேல்!

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved