MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினியை மட்டும் கொண்டாடவே பகத் பாசில் கேரக்டரை குளோஸ் பண்ணிய இயக்குநர் டி ஜே ஞானவேல்!

ரஜினியை மட்டும் கொண்டாடவே பகத் பாசில் கேரக்டரை குளோஸ் பண்ணிய இயக்குநர் டி ஜே ஞானவேல்!

 Fahadh Faasil's role in Rajinikanth's Vettaiyan Movie Prematurely Terminated: வேட்டையன் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், கிளைமேக்ஸுக்கு முன்னரே முடிக்கப்பட்டது. ரஜினிகாந்த்தை முன்னிலைப்படுத்தவே இவ்வாறு செய்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

3 Min read
Rsiva kumar
Published : Oct 12 2024, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vettaiyan, Rajinikanth, Fahadh Faasil

Vettaiyan, Rajinikanth, Fahadh Faasil

 Fahadh Faasil's role in Rajinikanth's Vettaiyan Movie Prematurely Terminated: வேட்டையன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பகத் பாசிலின் கதாபாத்திரத்தை கிளைமேக்ஸிற்கு முன்னதாகவே இயக்குநர் டி ஜே ஞானவேல் குளோஸ் பண்ணிவிட்டார். இதற்கு என்ன காரணம் ஏன் அவ்வாறு செய்தார் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் வேட்டையன்.

ஜெய் பீம் பட இயக்குநர் டி ஜே ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கூட்டத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் டி ஜே ஞானவேலிவிற்கு அந்த படம் ஹிட் மேல ஹிட் கொடுத்தது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருந்தாலும் பட்டிதொட்டியெங்கும் ஜெய் பீம் படம் பரவியது.

26
Vettaiyan Movie Review, Vettaiyan Rajinikanth

Vettaiyan Movie Review, Vettaiyan Rajinikanth

முழுக்க முழுக்க உண்மை கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை ஒட்டு மொத்த சினிமா உலகமும் கொண்டாடியது. அதன் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினியுடன் இணைந்தார். வேட்டையன் படத்தை இயக்கினார். அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், 2ஆம் பாதி சற்று பின்னடைவாக இருந்தது. மேலும், முதல் பாதியில் ரஜினிகாந்த் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் காம்பினேஷன் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது. உண்மையில் சொல்லப் போனால், ரஜினியை விட பகத் பாசிலுக்கு தான் அதிக வெயிட்டேஜ். அஜினிகாந்த் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும் வந்து சென்று கிளாப்ஸ் தட்டிச் சென்றார்.

36
Rajinikanth, Amitabh Bachchan

Rajinikanth, Amitabh Bachchan

மேலும், படத்தை பகத் பாசில் கொண்டு செல்ல கடைசியில் அவரது கதாபாத்திரத்தை கிளைமேக்ஸ் வரை கொண்டு செல்லாமல் அதற்கு முன்னதாகவே முடித்துவிட்டார். இதற்கு காரணம் ரஜினியை தான் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக.

ரஜினிக்கு வெயிட் கொடுக்காமல் பகத் பாசிலுக்கு வெயிட் கொடுத்தால் இயக்குநரை சும்மா விடமாட்டார்கள். ஆதலால் ரஜினியை காப்பாற்ற பகத் பாசில் கேரக்டரை போட்டு தள்ளிவிட்டார். படம் முழுவதும் பயணித்த பகத் பாசில், ரஜினிக்கு பக்க பலமாக இருந்தார்.

46
Vettaiyan Movie, Rajinikanth, T J Gnanavel

Vettaiyan Movie, Rajinikanth, T J Gnanavel

முதல் பார்ட்டில் ரவுடிகள் இருக்கும் இடத்தை காட்டி கொடுப்பதும் பகத் பாசில் தான், கஞ்சா குடோனை காட்டி கொடுப்பதும் பகத் பாசில் தான், மருத்துவமனையிலிருந்து அசல் கோளாரை தப்பி வைத்தது அவரது நண்பன் தான் என்று கண்டுபிடிப்பதும் பகத் பாசில் தான், அவரது மொபை போனை டிராக் செய்து கண்டு பிடிப்பதும் பகத் பாசில் தான், ரஜினியை ஏன் என்கவுண்டர் செய்தார் என்பதற்கான விளக்கத்திற்கும் பகத் பாசில் தான் காரணம், எஸ்பி ஹரிஷ் குமாருக்கும், சரண்யா (துஷாரா விஜயன்) கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கண்டு பிடித்ததும் பகத் பாசில் தான், இறுதியாக வில்லன் ராணா டகுபதிக்கும், சரணயா கொலைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கண்டு பிடித்து கொடுப்பதும் பகத் பாசில் தான்.

56
Vettaiyan Review, Dushara Vijayan, Manju Warrier

Vettaiyan Review, Dushara Vijayan, Manju Warrier

இப்படி எல்லாவற்றையும் செய்து கொடுத்த பகத் பாசிலை கிளைமேக்ஸ் வரை கொண்டு செல்லாதது சற்று வருத்தம் அளிக்கிறது. ஆனால், கிளைமேக்ஸில் வில்லன் இருக்கும் இடம் எப்படி ரஜினிகாந்திற்கு தெரிந்தது? திடீரென்று எப்படி ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார், இதெல்லாம் சற்று புரியாத புதிராக உள்ளது. சரண்யாவை கொலை செய்ததாக நினைத்து குணாவை என்கவுண்டர் செய்யும் ரஜினிகாந்த், ஏன் சைபர் பேட்ரிக்காக வரும் பகத் பாசிலை கொலை செய்தவர்களை மட்டும் என்கவுண்டர் செய்யவில்லை.

தப்பிக்க முயற்சி என்று போட்டு தள்ளியிருக்கலாம். வில்லனுக்கு டம்மி கேரக்டரை கொடுத்து வைத்திருக்கிறார். பெரிதாக வில்லன் ரோல் பேசப்படவில்லை. முழுக்க முழுக்க ஒரு சைடை வெயிட்டாக காட்டிய இயக்குநர் இன்னொரு சைடை டம்மியாக காட்டியிருக்கிறார். கம்பெனி தான் பெரிதாக இருக்கே தவிர அபிராமியும் சரி, ராணா டகுபதியும் சரி பெரிதாக பேசப்படவில்லை.

66
Fahadh Faasil

Fahadh Faasil

துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில் ஆகியோரது கதாபாத்திரத்திற்கு கிளாப்ஸ். ஆனால், மஞ்சு வாரியர் துப்பாக்கியால் சுடுவது எல்லாம் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் பார்த்தாச்சு. அதுல சேதுபதியின் மகன் சுடுவான், இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் சுடுறாங்க..அவ்வளவு தான் வித்தியாசம்.

அந்த ஒரு பாட்டு மஞ்சு வாரியரை தூக்கி நிறுத்திடுச்சு. மற்றபடி ஒன்னும் இல்லை. ரக்‌ஷனும் அப்பப்போ வந்துட்டு போறாரு, படத்தில் வரும் அமைச்சரும் அப்படி தான். ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே ரஜினியை கடைசி வரை கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களை பாதியிலேயே ஸ்டாப் பண்ணிட்டாரு….

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அமிதாப் பச்சன்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved