MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதல் மோசடி புகார் எதிரொலி... விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன் - அறம் வெல்லுமா? ஆக்‌ஷன் எடுக்கப்படுமா?

காதல் மோசடி புகார் எதிரொலி... விசாரணை வளையத்துக்குள் சிக்கிய விக்ரமன் - அறம் வெல்லுமா? ஆக்‌ஷன் எடுக்கப்படுமா?

பிக்பாஸ் விக்ரமன் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 21 2023, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் விக்ரமன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்த கிருபா முனுசாமி என்பவர் கொடுத்த மோசடி புகார் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருபா முனுசாமி டுவிட்டரில் விக்ரமன் தன்னிடம் மெசேஜ் வாயிலாக உரையாடியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டு அவர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பணம் பறித்து ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். தன்னைப்போல் 15 பெண்களை விக்ரமன் ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார் கிருபா முனுசாமி.

35
vikraman

vikraman

இதையடுத்து கிருபா முனுசாமி குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என திட்டவட்டமாக கூறிய விக்ரமன், ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் இந்தக் கதைக்கும் இரு பக்கங்கள் உள்ளது எனக்கூறி கிருபா முனுசாமி தனக்கு எழுதிய காதல் கடிதங்களையும் வெளியிட்டு இருந்தார் விக்ரமன். அதேபோல் அந்த பதிவில் அறம் வெல்லும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... அறம் வெல்லும்... கிருபா முனுசாமியின் அடுக்கடுக்கான மோசடி புகார் குறித்து முதன்முறையாக வாய்திறந்த விக்ரமன்

45

இந்த நிலையில், தற்போது விக்ரமன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் கிருபா, அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், விக்ரமனும், தானும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக பழகி வந்ததாகவும், தன்னை காதலிப்பதாக சொன்ன அவரிடம் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

55

மேலும் தன்னை காதலிப்பதாக கூறி ரூ.13.7 லட்சம் பணம் வாங்கிய விக்ரமன், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். எஞ்சியுள்ள ரூ.1.7 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இப்படி காதலிப்பதாக கூறி மோசடி செய்த விக்ரமன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அவர்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கிருபா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கிருபாவின் புகார் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக இதுகுறித்து விக்ரமனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதனால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் அறம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... தந்தையுடன் என்ன பிரச்சனை... பிரிந்து சென்றதற்கு யூடியூப் தான் காரணமா? முதன்முறையாக மனம் திறந்த இர்பான்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image2
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Recommended image3
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved