MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Khushbu : 'அதே பாசம், அதே புன்னகை'... குடும்பத்தோடு முதல்வர் விஜய்யை சந்தித்த பின் குஷ்பு போட்ட நெகிழ்ச்சி பதிவு..!

Khushbu : 'அதே பாசம், அதே புன்னகை'... குடும்பத்தோடு முதல்வர் விஜய்யை சந்தித்த பின் குஷ்பு போட்ட நெகிழ்ச்சி பதிவு..!

Khushbu Meets Tamil Nadu CM Vijay : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 03 2026, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Khushbu Daughter Avantika Wedding
Image Credit : X/khushsundar

Khushbu Daughter Avantika Wedding

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குஷ்பு மகள் திருமணம்
Image Credit : X/khushsundar

குஷ்பு மகள் திருமணம்

குஷ்பு – சுந்தர்.சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான அவந்திகா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். அவரது திருமணம் ஷ்ரவண் ஸ்ரீனிவாசனுடன் நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குஷ்பு மற்றும் சுந்தர்.சி தம்பதியினர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். இந்த சந்திப்பு குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
Now Playing
விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
Related image2
Now Playing
தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
34
விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்
Image Credit : X/khushsundar

விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்

இந்த சந்திப்பு குறித்து குஷ்பு தனது சமூக வலைதளப் பதிவில், முதல்வர் விஜய் எப்போதும் போல அன்புடனும் பாசத்துடனும் தங்களை வரவேற்றதாக தெரிவித்துள்ளார். தனது பிஸியான அரசுப் பணிகளுக்கிடையிலும் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி சந்தித்ததற்கும், திருமணத்திற்கான வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியதற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வரை சந்தித்த போது குடும்பத்தின் இளம் உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததாகவும், அவருடன் கழித்த தருணங்கள் என்றும் நினைவில் நிற்கும் என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

44
ஹீரோயினான அவந்திகா
Image Credit : X/khushsundar

ஹீரோயினான அவந்திகா

அவந்திகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தனது முதல் படம் வெளியாகும் முன்பே அவரது திருமண செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பாக மணமக்கள் மற்றும் குஷ்பு – சுந்தர்.சி தம்பதியினர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் விஜய்யையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குஷ்பூ
Latest Videos
Recommended Stories
Recommended image1
June Release Movies : ஜூன் மாதம் தியேட்டர்களை ஆக்கிரமிக்க வரும் புதுப்படங்கள் என்னென்ன? ஜனநாயகனும் இம்மாதம் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Killer Movie Accident : கில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென வெடித்த சிலிண்டர்... ஒருவர் பலியானதால் பரபரப்பு
Related Stories
Recommended image1
Now Playing
விஜயும், சீமானும் ஆர்எஸ்எஸ்ஸின் பிள்ளைகள் என்ற திருமாவளவன் கருத்துக்கு குஷ்பு பதில்
Recommended image2
Now Playing
தப்பான ஆட்சி நடக்கும் போது அப்பான்னு எப்படி கூப்புடுறது.! திமுகவை கிழித்து தொங்க விட்ட குஷ்பு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved