- Home
- Cinema
- சூர்யாவின் ஜெய்பீம் படத்தை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2...இதிலும் ராக்கி பாய்க்கு தான் முதலிடம்
சூர்யாவின் ஜெய்பீம் படத்தை ஓரங்கட்டிய கே ஜி எஃப் 2...இதிலும் ராக்கி பாய்க்கு தான் முதலிடம்
இந்திய படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கே ஜி எஃப் 2 திரைப்படம் தட்டி சென்றுள்ளது.

kgf 2
விஜய்யின் பீஸ்ட்க்கு போட்டியாக யாஷின் வெளியான கே ஜிஎஃப் திரைப்படம் உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14 ம் தேதி வெளியானது.
kgf 2
ராக்கி பாய் என ரசிகர்கள் மனதில் பதிந்து போன யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்1.
kgf 2
இந்த படத்தின் வெற்றி ரசிகர்கள் மனதில் அடுத்த பாகத்திற்கான விதையை ஆழ பதிய செய்தது. இதையடுத்து நான்கு வருடங்களுக்கு மேலாக இரண்டாம் பாகம் உருவானது.
kgf 2
கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
kgf 2
தமிழகத்தில் கே.ஜி.எஃப் 2, 300க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியிடப்பட்டன. உலகம் முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியானது.
kgf 2
படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
kgf 2
முதல் நாளில் மட்டும் உலகளவில் சுமார் ரூ. 160 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
kgf 2
இந்நிலையில் இந்திய படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கே ஜி எஃப் 2 திரைப்படம் தட்டி சென்றுள்ளது. முன்னதாக சூர்யாவின் ஜெய் பீம் (8.4) ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.