MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாக நடித்த யூத் திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 11 2026, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Youth OTT Release Date
Image Credit : X

Youth OTT Release Date

சினிமாவில் நெப்போ கிட்ஸ் வரிசையாக வந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டும் தான் அவர்களால் ஜொலிக்க முடிகிறது. அந்த வகையில் ஒரு நெப்போ கிட் ஆக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் தான் கென். நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸின் மகனான இவர், சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார். இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது வெற்றிமாறனின் அசுரன் படம் தான். அதில் தனுஷின் மகனாக சிதம்பரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் கென். அவரின் நடிப்பை பார்த்து வியந்த வெற்றிமாறன் அவரை தன்னுடைய விடுதலை 2 படத்திலும் நடிக்க வைத்திருந்தார்.

25
அடிபொலி ஹிட்
Image Credit : X

அடிபொலி ஹிட்

இப்படி நடிப்பில் படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டே சென்ற கென் கருணாஸ், இயக்குனராக அறிமுகமாகப் போகிறார் என்கிற செய்திகள் வந்ததும் அப்படத்திற்கு பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் அப்படத்தின் ஷூட்டிங்கெல்லாம் முடித்த பின்னர் அதன் முதல் சிங்கிள் பாடலாக முட்ட கலக்கி என்கிற பாடலை வெளியிட்ட பின்னர் தான் யூத் படத்தின் மீது மிகப்பெரிய ஹைப் உருவானது. இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என திரும்பிய பக்கமெல்லாம் முட்ட கலக்கி பாடல் தான் ஆக்கிரமித்து இருந்தன. இதுவே அப்படத்தை ஈஸியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட்டது.

Related Articles

Related image1
பெரிய படங்களுடன் மோதி ஜெயித்த 'யூத்'... பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம்பிடித்து சாதனை..!
Related image2
கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
35
பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த யூத்
Image Credit : X

பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த யூத்

பாடல்கள் ஆடியன்ஸை தியேட்டர்களுக்கு இழுத்து வந்தாலும் படத்தின் கதை நன்றாக இருந்தால் தான் திரையரங்குகளில் நிலைத்திருக்கும். அந்த மேஜிக்கை யூத் படம் பூர்த்தி செய்ததால் தான் அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படம் ரிலீஸ் ஆனபோது அதற்கு போட்டியாக எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அது யூத் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது. இதன் காரணமாக யூத் படம் சிங்கம்போல் சிங்கிளாக வசூல் வேட்டை ஆடத் தொடங்கியது. இரண்டு வாரங்களைக் கடந்தும் அப்படம் வெற்றிநடை போட்டு வந்தது. நேற்று வெளியான எல்.ஐ.கே படம் தான் அப்படத்தை ரீப்ளேஸ் செய்துள்ளது.

45
யூத் ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

யூத் ஓடிடி ரிலீஸ்

தியேட்டர்களில் யூத் படத்தின் ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், அதன் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தடாலடியாக அறிவித்து உள்ளனர். அதன்படி யூத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 16ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றி உள்ளது. தியேட்டரில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் ரிலீஸ் ஆகி இருந்த யூத் திரைப்படம், ஓடிடியில் கூடுதலாக இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வருகிற ஏப்ரல் 16ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

55
யூத் பட வசூல்
Image Credit : X

யூத் பட வசூல்

யூத் படம் ஓடிடிக்கு வர உள்ள நிலையில், அப்படம் திரையரங்குகளில் வாரிசுருட்டிய வசூல் விவரமும் கசிந்துள்ளது. அதன்படி யூத் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூலித்து உள்ளது. இதுதவிர இதன் தெலுங்கு வெர்ஷன் 10 கோடியும், வெளிநாடுகளில் 11 கோடியும் இப்படம் வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் யூத் படம் உலகளவில் ரூ.81 கோடி வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய படங்களின் பட்டியலில் டாப் 3 இடத்துக்குள் நுழைந்துள்ளது. இதற்கு முன்னதாக ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் 80 கோடிக்கு மேல் வசூலித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி
Recommended image2
ஜன நாயகன் லீக்.... ரஜினி, கமல் உள்பட தளபதிக்கு சப்போர்ட்டாக படையெடுத்து வந்த கோலிவுட் ஸ்டார்ஸ்
Recommended image3
LIK Movie Day 1 Box Office : லவ் இன்சூரன்ஸ் கம்பெனி முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
Related Stories
Recommended image1
பெரிய படங்களுடன் மோதி ஜெயித்த 'யூத்'... பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம்பிடித்து சாதனை..!
Recommended image2
கென் செய்த மாயம்.! ஃபீல் குட் மூவியா யூத்? குடும்பத்துடன் ரசிக்க இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved