- Home
- Cinema
- கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி'..! அட விஜய் டிவி பிரபலமும் இந்த படத்தில் நடிக்கிறாரா?
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி'..! அட விஜய் டிவி பிரபலமும் இந்த படத்தில் நடிக்கிறாரா?
நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க உள்ள 'கண்ணிவெடி' படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும், கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான தசரா மற்றும் தமிழில் வெளியான 'மாமன்னன் ' ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
குறிப்பாக 'மாமன்னன்' படத்தில் இதற்க்கு முன், ஏற்று நடித்திராத கம்யூனிசம் பேசும் பெண் கதாபாத்திரத்தில் .. கொஞ்சம் அதிரடியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து பாராட்டுக்களும் குவிந்து வந்தது.
சமந்தா - விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'குஷி' படப்பிடிப்பு நிறைவடைந்தது!
இதைதொடர்த்து, தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழில் கதையின் நாயகியாக நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. 'கண்ணிவெடி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, கணேஷ் ராஜ் என்பவர் எழுதி - இயக்க உள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.
இந்த படத்தில் நமீதா கிருஷ்ணா மூர்த்தி, விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமராஜன் டவுசரில்... டைட் டீ ஷர்டுடன் கடற்கரையில் குதூகலம் பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வைரல் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.