Keerthy Suresh : செல்ல பிராணியுடன் க்யூட்டாக கொஞ்சும் கீர்த்தி சுரேஷ் ..கூல் போட்டோஸ் இதோ
செல்லப்பிராணி மீது அலாதி பிரியம் கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். பிரபல தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு சினிமா துறையில் நுழைவது மிக எளிதாகவே இருந்தது.
அங்கு மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் தொடர்ந்து கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலம் நாயகியாக உருவெடுத்தார். இதை எடுத்து தமிழில் இது என்ன மாயம் படத்தில் மாயாவாக நடித்த இவருக்கு அந்த படம் போதுமான வரவேற்பை பெற்று தரவில்லை.
keerthy suresh
அதனால் தெலுங்கு பக்கம் சென்றார் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கார்த்திகா தேவி வேடத்தில் ரஜினி முருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு அதிக ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
மேலும் செய்திகளுக்கு...actress Aparna Vinod : விஜய் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்..வைரலாகும் சூப்பர் கூல் போட்டோஸ்
keerthy suresh
கண்களால் உருட்டி உருட்டி பார்த்து ரசிகர்களை கட்டி இழுத்தார் கீர்த்தி சுரேஷ். பின்னர் தொடரி, ரெமோ பைரவா என இவர் அடுத்தடுத்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் படங்களாக அமைய தனக்கான இடத்தை தரமாக தக்க வைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.
keerthy suresh
சிவகார்த்திகேயன், தனுஷ், விஜயுடன் நடித்த இவர் மீண்டும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சீமா ராஜா, விஷால் உடன் சண்டைக்கோழி 2, விஜயுடன் உடன் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் தோன்றி பாராட்டுகளை பெற்றார்.
keerthy suresh
முன்னதாக தெலுங்கில் இவர் நடித்த மகாநதி படம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தது சாவித்திரி தேவி வேடத்தில் வாழ்ந்து காட்டிய கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
keerthy suresh
கடந்த ஆண்டு அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் தங்கை தங்க மீனாட்சியாக வந்து கண்களிலேயே பாசமலர் படத்தை மீண்டும் காட்டி இருந்தார் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பு பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.
Keerthy Suresh
தற்போது தனக்கான வேடங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அதன்படி குட்லக் சகிதம், சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வெற்றி பெற்றனர்.
Keerthy Suresh
தற்போது தசரா, போலேசங்கர், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க வடிவேல் முக்கிய வேடத்தில் தோற்றுகிறார்.
Keerthy Suresh
இதற்கிடையே அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். செல்லப்பிராணி மீது அலாதி பிரியம் கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.