சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகுகிறாரா கதாநாயகன்? அப்செட்டில் ரசிகர்கள்..!
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய சீரியலில் இருந்து... கதாநாயகன் விலக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துள்ள கயல் சீரியலும் ஒன்று.
அப்பாவை இழந்து... சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்கிற கர்வத்துடன் கதாநாயகி தன்னுடைய சொந்த பந்தங்களை எதிர்த்து வாழ்ந்து காட்ட போராடி வரும் கயல் கதாபாத்திரத்தில், சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக, விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான சஞ்சீவ் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர்களுடை கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் இருந்து சஞ்சீவ் திடீர் என விலக உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ஆனால் தற்போது வரை இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாக வில்லை என்றாலும்... இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல்... ஒரு வேலை கயல் சீரியலில் இருந்து, சஞ்சீவ் விலகினாலும், அவருடைய கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.