கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ரா வயிற்றை கட்டிப்பிடித்து... கொஞ்சும் 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா! வைரலாகும் போட்டோ
சீரியல் நடிகை நக்ஷத்ரா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், இவரின் தோழி சைத்ரா அவரை சந்தித்து பாச மழை பொழிந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
nakshatra
நடிகை நக்ஷத்திரா தமிழில் 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும்,இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'யாரடி நீ மோகினி' சீரியல் தான்.
இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும், உண்மையில் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். அதே போல் ஷபானா, ரேஷ்மா போன்ற ஜீ தமிழ் தொலைக்காட்சி ஹீரோயின்கள் மற்றவர்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.
தற்போது ஷபானவைதவிர அனைவருமே திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து, சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் கடந்த ஆண்டு தன்னுடைய காதலரை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட நக்ஷத்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த தகவலை அறிவித்த நிலையில், பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நக்ஷத்திராவின் நெருங்கிய தோழியான கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி... கர்ப்பமாக இருக்கும் தோழியை சந்தித்து, தன்னுடைய பாச மழையை பொழிந்துள்ளார்.
அவரின் வயிற்றில் உள்ள குழந்தையை கொஞ்சியபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.