தண்டட்டி பட இயக்குநர் படத்தில் கமிட்டான டாடா ஹீரோ; இவ்வளவு சிம்பிளா நடந்த ஒப்பந்தம்!
Kavin Join With Director Ram Sangaiah For New Movie : நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவின் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய படத்தில் கமிட்டான கவின்
Kavin Join With Director Ram Sangaiah For New Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இடம் பெற்றிருப்பவர் நடிகர் கவின். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த கவின் அதன் பிறகு மாஸ் இயக்குநர் உடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தார். அதில் ஒரு படம் தான் டாடா. கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பீட்சா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான கவினுக்கு நட்புனா என்னானு தெரியுமா படம் தான் ஹீரோவாக அறிமுகம் செய்தது.
தண்டட்டி படத்தின் இயக்குநர் ராம் சங்கையா
இந்தப் படத்தைத் தொடர்ந்து லிஃப்ட் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், கே பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் டாடா. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஸ்டார், ப்ளெடி பெக்கர் படங்களில் நடித்தார். தற்போது இவருடைய நடிப்பில் கிஸ், மாஸ்க், ஹாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தண்டட்டி படத்தின் இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்கு கவின் கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான ஒப்பந்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.