- Home
- Cinema
- பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமா? போட்டி போடும் சிவனாண்டி, சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமா? போட்டி போடும் சிவனாண்டி, சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் 2
Karthigai Deepam 2 Panchayat Elections : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
Karthigai Deepam 2 Panchayat Elections : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஓளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலானது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சீரியலை டிவியில் பார்ப்பதற்கு முன்னதாக ஓடிடியில் பார்க்கலாம். இந்த சீரியலில் கடந்த வாரம் செங்கள் சூளை வருமானம் மூலமாக ரூ.50 லட்சம் வருமானம் வந்தது. அந்தப் பணத்தை திருடிச் சென்று தனது கணவர் சிவனாண்டியிடம் கொடுத்து அவரை ஊர் தலைவராக்க திட்டம் போட்டார் சந்திரலேகா. அதோடு அந்த வாரம் எபிசோடு முடிந்தது.
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில் செங்கல் சூலையில் வேலை செய்பவர்கள் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் புத்தாக சூலை ஆரம்பிக்க கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்கிறார்கள். சாமுண்டீஸ்வரியும் சரி என்று சொல்லி பணம் எடுக்க செல்கிறார். ஆனால், அவர் வைத்த பணத்தை காணவில்லை. ஏற்கனவே சந்திரலேகா அங்கிருந்த பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்.
பணம் இல்லாத நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி பணம் காணவில்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது சந்திரலேகா வழக்கம் போன்று இந்த முறையும் டிரைவர் ராஜா மீது பழி போடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி கார்த்திக்கிற்கு ஆதரவாக பேச, சந்திரலேகாவோ அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரம் பார்த்து யார் அதிகமாக பணம் தருகிறார்களோ அவர்கள் தான் ஊர் தலைவராக முடியும் என்று சொல்லி, சாமுண்டீஸ்வரியை ஊர் தலைவராக நிற்க ஐடியா கொடுக்கிறார் மயில்வாகனம்.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சம்
இதற்கு சாமுண்டீஸ்வரியும் சம்மதம் தெரிக்கிறார். ஏற்கனவே நாமினேஷன் தாக்கல் செய்ய சிவனாண்டி சென்ற நிலையில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சாமுண்டீஸ்வரி வருகிறார். அப்போது இருவருக்கும் சவால் வருகிறது. எப்படியோ நாமினெஷன் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பிறகு சாமுண்டீஸ்வரியை தோற்கடிக்க துர்காவை வீட்டை விட்டு ஓட வைக்க சந்திரலேகா திட்டம் போடுகிறார்.
உடனே சிவனாண்டியை சந்தித்து துர்காவை வீட்டை விட்டு ஓட வச்சுட்டா.. உன்னையே பாத்துக்க முடியாத சாமுண்டீஸ்வரி எங்கே ஊரை பாத்துக்க போறாங்க என்று சொல்லி தேர்தலில் நிற்பதை தடுத்து விடலாம் என்று கணக்கு போடுகிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.