- Home
- Cinema
- அனிருத் இசையில் ஒரு படம் கூட நடிக்காத டாப் 5 தமிழ் சினிமா ஹீரோக்கள் யார்... யார் தெரியுமா?
அனிருத் இசையில் ஒரு படம் கூட நடிக்காத டாப் 5 தமிழ் சினிமா ஹீரோக்கள் யார்... யார் தெரியுமா?
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் அனிருத், இதுவரை சில நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்ததே இல்லை. அதைப்பற்றி பார்க்கலாம்.

Anirudh Never Music For This Top 5 Tamil Actors
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷின் 3 படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் விஜய், ரஜினி, அஜித், கமல் என தொடர்ந்து பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து குறுகிய காலகட்டத்திலேயே அசுர வளர்ச்சி கண்டார். அனிருத் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவர் இசையில் ஒரு படம் கூட நடிக்காத டாப் ஹீரோக்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் யார்... யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார்த்தி
அனிருத் இசையில் ஒரு படம் கூட நடிக்காத ஹீரோக்களில் கார்த்தியும் ஒருவர். இவர் படங்களுக்கு பெரும்பாலும் கார்த்தி தான் இசையமைத்துள்ளார். இவர் நடித்த சுல்தான் படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடி இருந்தார். ஆனால் கார்த்தி படத்திற்கு இதுவரை அனிருத் இசையமைத்ததே இல்லை. விரைவில் இவர்கள் இருவரும் கூட்டணி சேரவும் வாய்ப்பு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள கைதி 2 திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.
ரவி மோகன்
கார்த்தியை போல் நடிகர் ரவி மோகன் படங்களுக்கும் இதுவரை அனிருத் இசையமைத்ததில்லை. ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, டி இமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் ரவி மோகன் படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், அவர் ஒருமுறைகூட அனிருத் உடன் கூட்டணி அமைக்காமல் இருந்து வருகிறார். எதிர்காலத்தில் இவர்கள் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிம்பு
அனிருத் இசையில் ஒரு படம் கூட நடிக்காத ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு சர்ப்ரஸான நபர் என்றால் அது சிம்பு தான். ஏனெனில் இவரும் அனிருத்தும் மிக நெருங்கிய நண்பர்கள். இருப்பினும் இவர்கள் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இவர்கள் பீப் சாங் என்கிற சுயாதீன இசைப்பாடலை இணைந்து உருவாக்கியது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. அதன் பின் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
விஷால்
அனிருத் உடன் இணைந்து பணியாற்றாத ஹீரோக்களில் விஷாலும் ஒருவர். இவர் படங்களுக்கு பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா அல்லது ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்கள். ஆனால் ஒருமுறை கூட அனிருத் இசையில் விஷால் நடித்ததில்லை. தற்போது விஷால் கைவசம் உள்ள படங்களுக்கும் அனிருத் இசையமைக்கவில்லை. விஷால் நடித்த அயோக்கியா படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா
அனிருத் இசையில் ஒரு படம் கூட நடிக்காத ஹீரோக்களில் ஆர்யாவும் இருக்கிறார். அவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவர் நடித்த ஒரு படத்திற்கு கூட அனிருத் இசையமைத்ததில்லை. பெரும்பாலும் நடிகர் ஆர்யா நடித்த படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.