லிங்குசாமி உடன் திடீரென கூட்டணி அமைத்த நடிகர் கார்த்தி... உருவாகிறதா பையா 2?
பையா படத்தில் இணைந்து பணியாற்றிய கார்த்தி - லிங்குசாமி கூட்டணி தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்ததால் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜப்பான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Throwback : தோனியின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - ஏன் தெரியுமா?
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கைதி 2, பி.எஸ்.மித்ரனின் சர்தார் 2 என நடிகர் கார்த்தி கைவசம் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்த பட்டியலில் புது வரவாக இணைந்துள்ள திரைப்படம் தான் லிங்குசாமி இயக்க உள்ள படம்.
நடிகர் கார்த்தி ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால், அது பையா படத்தின் 2-ம் பாகமாக இருக்குமா என்பது தான் ரசிகர்கள் மனதில் எழக்கூடிய கேள்வியாக இருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் இணைய உள்ள படம் பையா 2 இல்லை என்றும், அது புது கதைக்களத்தில் உருவாகும் படம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ஷங்கர் இவ்ளோ நாள் சீக்ரெட்டா வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே... இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவர்தானாம்