MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷங்கர் இவ்ளோ நாள் சீக்ரெட்டா வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே... இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவர்தானாம்

ஷங்கர் இவ்ளோ நாள் சீக்ரெட்டா வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே... இந்தியன் 2 படத்தின் மெயின் வில்லன் இவர்தானாம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2023, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ஷங்கர். இதற்கு காரணம் அவர் இயக்கிய படங்கள் தான். வழக்கமாக இயக்குனர்கள் சண்டைக்காட்சிகளை தான் பிரம்மாண்டமாக எடுப்பார்கள், ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஒருபடி மேலே போய் பாடல்காட்சிகளில் வித்தியாசமாக யோசித்து பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருப்பார். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தற்போது ஷங்கர் இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒன்று கேம் சேஞ்சர், ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்கி வருகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்...  பிகினி போட்டோஷூட்டுக்கு தயாராகிறாரா குட்டி நயன்..! ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய அனிகாவின் இன்ஸ்டா பதிவு

34

அதேபோல் ஷங்கர் இயக்கிவரும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2. லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட்டும் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வருகிறார். அவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்துவிடும்.

44

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் நடிகர் யார் என்கிற தகவலை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார். அந்த சீக்ரெட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் இந்தியன் 2 படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளாராம். இப்படத்திற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஆதிபுருஷ் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒரு சீட் அனுமனுக்கு ஒதுக்கப்படும் - படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image2
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Recommended image3
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved