வேட்டையன் வரவால் தியேட்டரில் இருந்து ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் மெய்யழகன் - எப்போ ரிலீஸ்?
Meiyazhagan OTT Release : பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் கசிந்துள்ளது.
Meiyazhagan
96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தமிழில் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ஸ்வாதி கொண்டே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வந்தது.
Meiyazhagan Karthi
3 மணிநேர படமாக ரிலீஸ் ஆனதால் ஆரம்பத்தில் இப்படம் ஸ்லோவாக நகர்வதாக விமர்சனம் வந்தது. பின்னர் உடனடியாக படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை படக்குழு கத்திரிபோட்டு தூக்கியதால் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. குறிப்பாக பேமிலி ஆடியன்ஸை இப்படம் பெரியளவில் கவர்ந்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வரும் மெய்யழகன் திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்...Yogi Babu Video: புதிய வேடத்தில் களவானிகள்; வீடியோ வெளியிட்ட யோகி பாபு - போலீஸ் எச்சரிக்கை!
Meiyazhagan Box Office
மெய்யழகன் திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ.46.5 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. விரைவில் 50 கோடி வசூலையும் இப்படம் எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்ப்படுகிறது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக வருகிற அக்டோபர் 10ந் தேதி நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. வேட்டையன் படம் ரிலீஸ் ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளை அத்திரைப்படம் ஆக்கிரமித்து விடும்.
Meiyazhagan OTT Release
இதனால் இரண்டே வாரத்தில் மெய்யழகன் திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட வாய்ப்புள்ளது. தியேட்டரில் தூக்கினாலும் ஓடிடியில் விரைவில் மாஸ் காட்ட வருகிறது மெய்யழகன். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதன்படி தீபாவளி ஸ்பெஷலாக மெய்யழகன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக அதிகளவில் வாய்ப்புக்கள் உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...அந்த நிகழ்ச்சியால் வந்த வினை! விஜய் டிவி தொகுப்பாளர் மகாபா மீது வழக்கு பதிவு!