- Home
- Cinema
- 1960ல் நடக்கும் கதை – மீண்டும் ஆக்ஷன் டிராமா கதையில் கார்த்தி – 5 மொழிகளில் உருவாகும் மார்ஷல்!
1960ல் நடக்கும் கதை – மீண்டும் ஆக்ஷன் டிராமா கதையில் கார்த்தி – 5 மொழிகளில் உருவாகும் மார்ஷல்!
marshal movie begins with pooja ceremony : கார்த்தி நடிப்பில் உருவாகும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

மார்ஷல் பட பூஜை
marshal movie begins with pooja ceremony : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சமீபகாலமாக இவரது நடிப்பில் திரைக்கு வரும் படங்கள் ஹிட் கொடுப்பதில்லை. சென்னையில் பிறந்து வளர்ந்த கார்த்தி பிடெக் மெக்கானிக்கல் இன் ஜினியரிங் படித்து முடித்துள்ளார். சினிமா மீதான ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அப்படி, அவர் நடித்து வெளியான முதல் படம் பருத்துவீரன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வந்தாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும்.
கார்த்தியின் மார்ஷல் பட பூஜை
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் மெய்யழகன். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில் அடுத்து கங்குவா, ஹிட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான 3 BHK படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
கார்த்தி, கல்யாணி பிரியதர்ஷன் மார்ஷல் பட பூஜை
இந்த நிலையில் தான் இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு படக்குழுவினர். மார்ஷல் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ஷல் பட பூஜை
டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றன. கடந்த 1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய படமாக மார்ஷல் படம் உருவாகி வருகிறது. டாணாக்காரன் பட இயக்குநர் புகழ் இந்தப் படத்தை இயக்குகிறார். டாணாக்காரன் ஹிட் கொடுத்ததைப் போன்று இந்தப் படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ஷல் பட பூஜை
5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்சன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன் ஈஸ்வரி ராவ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு மற்றும் இஷான் சக்சேனா தலைமையிலான ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.