MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • sardar first day box office : கார்த்தியின் சர்தார்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

sardar first day box office : கார்த்தியின் சர்தார்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்தியின் ஸ்பை திரில்லராக வெளியான சர்தார் படம்  3.7 கோடிகளை முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 22 2022, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தீபாவளி வெளியீடாக நேற்று கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் சர்தார் படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இவர் முன்னதாக இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா, ரஷிதா விஜயன் நடித்திருந்தனர்.

25

தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட்  மூவிஸ் தான் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இந்த படம் நேற்று திரையிடப்பட்டது. காலை 8 மணியிலிருந்து தான் சர்தார் படம் திரைக்கு வந்ததால் ரசிகர்களின் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 : ஒரு வழியாக முடிவான பிக்பாஸ் 6 காதல் ஜோடி ..இவர்கள் தானா?

35

இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. நல்ல பாசிட்டிவ் விமர்சனம் இருப்பதால்  100 கோடிக்கு மேல் படம் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டு நிறுத்தத்திற்கு பிறகு தற்போது தான் முடிவடைந்து திரைக்கு வந்துள்ளது சர்தார். படம் வெளியானது முதலே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வந்தது.

45

இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் தந்தை உளவாளியாகவும் மகன் போலீசாகவும் நடித்துள்ளனர். இந்திய உளவாளியாக இருக்கும் நாயகன் ராணுவ ரகசியங்களை கொண்ட ஒரு முக்கிய ஃபயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது தலைமறைவான மற்றொரு கார்த்தி சர்தார் என்கிற சந்திரபோஸ் (முன்னாள் உளவாளி) இடையே உள்ள தொடர்பை நாயகன் கண்டறிகிறார்.  தனது அப்பாவின் உண்மை வாழ்க்கை பற்றியும் மேலும் அறிய முயல்கிறார். 

மேலும் செய்திகளுக்கு... இன்று வெளியாகும் விஜய் பட அப்டேட் ?..இணையத்தை தெறிக்கவிடும் தகவல் இதோ

55

சர்தாருக்கும் ஃபயிலுக்கும் என்ன தொடர்பு  என விஜய் கண்டறிவதே இந்த படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. இதில் சந்திர போஸின்  மனைவி விஜயின் தாயாக ரஷீதா நடித்துள்ளார்.  இந்த படத்தில் யாருமயிலேறி என்னும் பாடலை கார்த்தி பாடி இருந்தார். இந்த பாடல் முதல் சிங்கிளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் வசூல் எவ்வளவு என பார்க்கலாம். கார்த்தியின் ஸ்பை திரில்லராக வெளியான சர்தார் படம்  3.7 கோடிகளை முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Recommended image2
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Recommended image3
ஆக்‌ஷன் மோடில் கார்த்திகை தீபம்! புதையல், மோதல் என பறக்கும் காட்சிகள் - லாஜிக் எங்கே எனப் புலம்பும் ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved