- Home
- Cinema
- சின்ன மாமியாரிடம் நேருக்கு நேர் சவால்விட்ட கார்த்திக் – துர்காவிற்கு யாருடன் திருமணம்? கார்த்திகை தீபம் 2
சின்ன மாமியாரிடம் நேருக்கு நேர் சவால்விட்ட கார்த்திக் – துர்காவிற்கு யாருடன் திருமணம்? கார்த்திகை தீபம் 2
Karthgai Deepam 2 Serial Indraya Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா
Karthgai Deepam 2 Serial Indraya Episode நாளுக்கு நாள் சீரியல் மீதான ஆர்வமும், ஆசையும் அதிகரித்த வண்ணம் உள்ளது, சன் டிவி, விஜய் டிவி, ஜீ5 டிவி என்று ஒவ்வொரு சேனல்களிலும் ரேட்டிங்கை பிடிக்க ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிலேயும், ஒரு சீரியலானது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்து இப்போது 2ஆவது சீசனை தொடங்கி ஒளிபரப்பு செய்து வருகிறது.
பொதுவாக சீரியல்களில் சினிமாவைப் போன்று இல்லாமல் பார்ட் 2 சீரியல் என்றால் சின்னதான ஒரு மாற்றத்துடன் ஒளிபரப்பு செய்யப்படும். உதாரணத்திற்கு முதல் சீசனில் ஹீரோ பணக்காரராக இருந்தால் 2ஆவது சீசனில் வேலைக்காரனாக இருப்பார். இதுவே முதல் சீசனில் ஹீரோயின் வேலைக்காரியாக இருந்தால் 2ஆவது சீசனில் பணக்காரங்களாக இருப்பார். முதல் சீசன் கிராமத்து கதை என்றால் 2ஆவது சீசன் சிட்டி கதை இல்லையென்றால் சிட்டி கதையிலிருந்து கிராமத்து கதை. இதுதான் காலங்காலமாக சீரியல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சந்திரலேகாவுடன் சபதம் எடுத்துக் கொண்ட கார்த்திக் ராஜா
இதே போன்ற டெக்னிக் தான் ஜீ5 கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் முதல் சீசனில் கார்த்திக்கை பணக்காரராக காட்டினாங்க. இப்போது 2ஆவது சீசனில் அவரை வீட்டு வேலைக்காரனாக டிரைவராக காட்டுறாங்க. இப்போது அவருக்கு திருமணமும் நடந்தது வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறார்.
இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவனாண்டி நவீன் மற்றும் துர்காவை கோவிலுக்குள் அடைத்து வைத்து இருக்க கார்த்திக் காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
புதிய பிளான் போட்ட கார்த்திக்
அதாவது, கோவிலுக்குள் பூட்டப்பட்டிருந்த துர்கா மற்றும் நவீனை காத்து பின்பக்க வழியாக காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறான். அதன் பிறகு துர்காவை வீட்டிற்கு அழைத்து வர ரேவதி அவளிடம் கோபப்பட்டு அறைகிறாள். இன்னொரு முறை இப்படி பண்ணாத உனக்கும் நவீனுக்கும் தான் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறாள்.
அதன் பிறகு கார்த்தியின் அத்தை தேர்தலில் நிற்பதால் எதுவாக இருந்தாலும் பார்த்து தான் செய்யணும் இதனால் பிரச்சனை வரும் என்று அட்வைஸ் கொடுக்கிறான். கார்த்திக் துர்கா நவீன காப்பாற்றிய விஷயம் அறிந்த சிவனாண்டி அடுத்த திட்டமாக நவீனை கடத்தல் அவனது ரூமுக்கு கிளம்பி செல்கிறான்.
துர்காவிற்கும் நவீனுக்கும் எப்போது கல்யாணம்
ஆனால் சிவனாண்டிக்கு முன்பாக கார்த்திக் அங்கு வந்து நவீனை காப்பாற்றுகிறான். சிவனாண்டியை அடித்து ஓட விட்டு நவீனுக்கும் துர்காவுக்கு தான் நிச்சயம் நடக்கும் என்று சந்திரகலாவிடம் சவால் விடுகிறார். சந்திரகலா அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று சவால் விட கார்த்திக் நடத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறார். ஒருவேளை இந்த சவாலில் ஜெயித்து விட்டால் நீ சிவனாண்டியுடன் போய் வாழுற வழியை பார்க்கணும் என்று கார்த்திக் கண்டிஷன் போடுகிறார்.
சந்திரகலா அப்படி நீ தோற்று போனால் சாமுண்டீஸ்வரியிடம் நீதான் ராஜா சேதுபதியின் பேரன்.. அபிராமியின் மகன், இந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பதற்காக வந்திருக்கும் உண்மையை சொல்ல வேண்டும் என்று சவால் விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இன்றைய எபிசோடில் நாம் பார்க்கலாம்.