மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவிப்பு!
கடந்த ஆண்டு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த, கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார். வீட்டில் உடல்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, கடந்த செப்டம்பர் மாதம் 29 அன்று மாரடைப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம் கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Image: Still from the movie
46 வயதில் அவருக்கு ஏற்பட்ட இந்த மரணத்தை தற்போது வரை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. மேலும் இவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்: குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!
Puneeth Rajkumar james
புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள் எண்ணற்றவை... ஏழைக் குழந்தைகளின் கல்வி பயில வேண்டும் என்பதிலும் ஒருவர் கூட உணவு இல்லாமல் இருக்க கூடாது என நினைப்பவர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு அவரது சமாதிக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வரும், புனீத் ராஜ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவருமான அம்மாநில முதல்வர் சவராஜ் பொம்மை தெரிவித்துளளார்.
மேலும் செய்திகள்: சூர்யாவுக்கு குவியும் கேமியோ வாய்ப்பு! ரோலக்ஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கிறாரா
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு, அம்மாநில அரசு கொடுத்துள்ள மரியாதைக்கு... திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.