MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!

குந்தவையாக மாறி த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிக்பாஸ் சுருதி..! வேற லெவல் போட்டோஸ்..!

பொன்னியின் செல்வன் த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக பிக்பாஸ் சுருதி, குந்தவையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2022, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சேலத்தை சேர்ந்த பிரபல மாடலான சுருதி, தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், இவர் குந்தவையாக மாரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

28

பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி, பாதியிலே குறைவான வாக்குகளோடு வெளியேறினாலும்... இதன் பின்னர் இவர் கலந்து கொண்டு விளையாடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மிகவும் சாமர்த்தியமாக விளையாடினார்.

மேலும் செய்திகள்: சூர்யாவுக்கு குவியும் கேமியோ வாய்ப்பு! ரோலக்ஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கிறாரா
 

38

விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி, மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி தற்போது மாடலிங் துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

48

அவர் தன்னை பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து கொண்ட போது, இவரை பார்த்து பரிதாபப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாத அந்த அளவிற்கு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்தவர் சுருதி.

மேலும் செய்திகள்: கதாசிரியர் என்கிற இனமே தமிழ் சினிமாவில் அழிந்துவிட்டது, விருது வழங்கும் விழாவில் வசந்தபாலன் வேதனை!
 

58

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, மாடலிங் என்கிற  ஒரு துறை இருக்கிறது என்றே தெரியாமல் அந்த துறையில் நுழைந்து தற்போது, வெற்றிநடை போட்டு வரும் சுருதி பெரியசாமி, அவ்வப்போது தினுசு தினுசாக போஸ் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

68

சேலை, பாவாடை தாவணியில் துவங்கி... 2 பீஸ் உடை ஆகியவற்றை அணிந்து ரணகளம் செய்துள்ளார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் குத்தவையாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேறு லெவலுக்கு வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: உள்ள ஒன்னும் போடலையா? பார்த்ததுமே பதற வைத்த யாஷிகா... பிறந்த நாளுக்கு கில்மா உடையில் கவர்ச்சி விருந்து!
 

78

த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, இவரது தோற்றம் உள்ளதாக நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். ஒரு வேலை த்ரிஷாவுக்கு முன்னர் மணிரத்தினம் இவரை பார்த்திருந்தால்... இவரே கூட ஹீரோவாக நடித்திருக்கலாம்.

88

இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது மட்டும் இன்றி, குந்தவை செந்தாமரை நிறத்தினள், குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது. குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.“ என்கிற கல்கியின் வரிகளை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image2
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved