Varaha Roopam Song: 'காந்தாரா' பட பாடலுக்கு போடப்பட்ட தடை நீக்கம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
காப்பியடிக்கப்பட்டதாக கூறி 'காந்தாரா' படத்தில் இடம்பெற்ற, வராக ரூபம் பாடல் படத்தில் இடம்பெற தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப் படத்திற்கு பின்னர், ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட கன்னட திரைப்படம் என்றால் அது 'காந்தாரா' தான். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் இந்த திரைப்படம் வெளியானது. மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி... இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 400 கோடி வசூல் சாதனை செய்த படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், 'காந்தாரா' படத்தில் இடம்பெற்ற 'வராக ரூபம்' பாடல், மலையாள இண்டிபெண்டெண்ட் பாடலான 'நவரசம்' என்ற பாடலை காப்பியடித்து எடுக்கப்பட்டதாக, கேரளாவை சேர்ந்த பிரபல இசை குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவைச் சேர்ந்தவர்கள் கோழிக்கோடு மாவட்டம், செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் தாங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு இசையமைத்த இண்டிபெண்டன் பாடலான நவரசம் பாடலை காப்பி அடித்து தான் 'வராக ரூபம்' பாடல் எடுக்கப்பட்டதாகவும், தெரிவித்திருந்தனர்.
Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 'வராக ரூபம்' பாடல் அமேசான், youtube, போன்ற சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப தடை வழங்கியது நீதி மன்றம். மேலும் இந்த பாடலுக்கு தடை கோரிய, தாய்க்குடம் ப்ரிஜ்ட் இசைக்குழுவினரிடம், இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டது.
ஆனால் உரிய ஆவணங்களை இசை குழுவினர் சமர்பிக்காத காரணத்தால், தற்போது 'வராக ரூபம்' பாடலுக்கு போடப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனவே நேற்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான போது, 'வராக ரூபம்' பாடல் இடம்பெறவில்லை என்றாலும், இனி சேர்க்கப்படும் என அறிவித்துள்ளது... ரசிகர்களை மகிழ்ச்சியில் செய்துள்ளது. அதே போல் இந்த பாடலில் இருந்த பழைய இசை நீக்கப்பட்டு, புதிய இசை கோர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.