- Home
- Cinema
- தனுஷை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி... இட்லி கடை, காந்தாரா 2 நடிகர்களின் சம்பள விவரம் இதோ
தனுஷை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி... இட்லி கடை, காந்தாரா 2 நடிகர்களின் சம்பள விவரம் இதோ
ஆயுத பூஜை விடுமுறையில் தனுஷ் நடித்த இட்லி கடை மற்றும் ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

Dhanush and Rishab Shetty Salary
அக்டோபர் 1ந் தேதி ஆயுத பூஜையும், 2ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரு தினங்களுமே இரண்டு முன்னணி நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகிறது. அதன்படி அக்டோபர் 1ந் தேதி தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படமும், அக்டோபர் 2ந் தேதி ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் திரைக்கு வர உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இதில் ஹீரோவாக நடித்தவர்கள் தான் இப்படத்தை இயக்கியும் உள்ளார்கள். இட்லி கடை படத்தை தனுஷும், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியும் இயக்கி உள்ளனர்.
தனுஷ் சம்பளம்
இதில் தனுஷ் இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் கிராமத்து கதையம்சத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, அருண் விஜய், பார்த்திபன், இளவரசு, நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. இப்படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ரூ.40 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி சம்பளம்
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த 2022-ம் ஆண்டு வெளிவந்த காந்தாரா முதல் பாகத்தின் வெற்றி தான். கம்மி பட்ஜெட்டில் உருவாகி அதிரிபுதிரியான வெற்றியை பெற்றதால் காந்தாரா சாப்டர் 1 படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளனர். இப்படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்காக நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ரூ.100 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்திற்கு ரிஷப் வாங்கிய சம்பளம்
காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக 100 கோடி சம்பளம் வாங்கியுள்ள ரிஷப் ஷெட்டி, அதன் முதல் பாகத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஆடிப்போவீர்கள். காந்தாரா முதல் பாகம் மிகவும் கம்மி பட்ஜெட்டில் உருவான படம் என்பது அனைவரும் அறிந்ததே, அப்படத்திற்காக ரிஷப் ஷெட்டி வெறும் 2 கோடி தான் சம்பளமாக வாங்கினாராம். அதன் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா அளவில் அவருக்கு மார்க்கெட் எகிறியதால், காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை 98 கோடி அதிகரித்து உள்ளாராம். ஒரே படத்தில் அவரின் வாழ்க்கை ஓஹோனு மாறி இருக்கிறது.