ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இன்று நடைபெற இருந்த அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Kantara Chapter 1 Chennai Pre Release Event Cancelled : கரூரில் நடிகர் விஜய் கலந்துகொண்ட அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து, சென்னையில் இன்று நடைபெறவிருந்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாளே பிலிம்ஸ், சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த ‘காந்தாரா சாப்டர் 1’ விளம்பர நிகழ்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்காக, படக்குழுவினர் நாடு முழுவதும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ழ்சி தான் தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

காந்தாரா சாப்டர் 1-க்கு எதிர்ப்பு

நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் காந்தாரா சாப்டர் 1 படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‘கன்னட திரையுலகம், கன்னட மொழி, கன்னட ரசிகர்கள் பெயரில் எங்களது தெலுங்கு படங்களான புஷ்பா 2, ஹரிஹர வீரமல்லு படங்களின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. ஓஜி படத்தின் பேனரும் கிழிக்கப்பட்டு, காட்சிகள் தடுக்கப்பட்டன. கர்நாடகாவில் தெலுங்கு படங்களின் திரையிடலுக்கு இடையூறு செய்யும்போது, அதே கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு படத்தை நாங்கள் ஏன் வரவேற்க வேண்டும்’ என்று கூறி காந்தாரா 1 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.