Kannappa Box Office : கண்ணப்பா திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
விஷ்ணு மஞ்சு நடித்த கண்ணப்பா படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சிறப்பாக வசூல் செய்து வருகிறது. இரண்டே நாட்களில் ரூ.16.35 கோடி வசூலித்து, விஷ்ணு மஞ்சுவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமைய வாய்ப்புள்ளது.

கண்ணப்பா பாக்ஸ் ஆபிஸ் வசூல்
விஷ்ணு மஞ்சுவின் புராணப் படமான கண்ணப்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டியுள்ளது. விஷ்ணு மஞ்சு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் மற்றும் மோகன்லால் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். இது இப்படத்துக்கு பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. மேலும் மோகன் பாபு, சரத்குமார், மது, பிரீத்தி முகுந்தன் ஆகியோரும் இந்த நடிகர்களில் அடங்குவார்கள்.
கண்ணப்பா திரைப்படம்
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவிக்கிறது. விஷ்ணு மஞ்சுவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது, கண்ணப்பா இவரது மிகப்பெரிய வெற்றியாகன் மாறியுள்ளது என்றே கூறலாம். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.9.35 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் ரூ.7 கோடி வசூல் செய்தது. இதனால் உள்நாட்டு மொத்த வசூல் இரண்டே நாட்களில் ரூ.16.35 கோடியை எட்டியது.
கண்ணப்பா முதல் நாள் வசூல்
முதல் வார இறுதியில் இந்தப் படம் ரூ.20 கோடி வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணப்பா படம் தெலுங்கு பகுதிகளில் நல்ல வசூலை கொடுத்து வருகிறது. சனிக்கிழமை 44.42 சதவீத வசூலைப் பதிவு செய்துள்ளது. காலை காட்சிகள் 27 சதவீதத்தில் தொடங்கின. ஆனால் இரவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, 58.54 சதவீத வசூலை எட்டியது என்று தகவல்கள் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் நாளில் இந்தப் படம் 19.84 சதவீத பார்வையாளர்களைப் பதிவு செய்தது.
கண்ணப்பா பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பிற்பகல் காட்சிகள் 23.41 சதவீதமாகவும், இரவு காட்சிகள் 27.68 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. அதுமட்டுமின்றி கண்ணப்பா திரைப்படம் இந்தி மற்றும் மலையாள பதிப்புகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது என்றும் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது கண்ணப்பா இரண்டு நாட்களுக்குள் அந்த எண்ணிக்கையைத் தாண்டியது. இன்று ஞாயிற்றுக்கிழமை வசூல் வலுவாக இருந்தால், கண்ணப்பா விஷ்ணு மஞ்சுவின் இதுவரை அதிக வசூல் செய்த படமாக மாறும்.
கண்ணப்பா 2நாள் வசூல்
இரண்டாம் நாளில், கண்ணப்பா நல்ல வசூலை கொடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ.7 கோடி நிகர வசூலை ஈட்டியது. முதல் நாளிலிருந்து சிறிது சரிவு ஏற்பட்டாலும், படம் நல்ல வசூல் அளவைத் தக்க வைத்துக் கொண்டது, குறிப்பாக மாலை மற்றும் இரவு காட்சிகளில். இதன் மூலம், கண்ணப்பாவின் இரண்டு நாட்களில் மொத்த வசூல் இந்தியாவில் ரூ.16.35 கோடியாக உள்ளது.