கமல் போடும் கண்டிஷன்... செம்ம அப்செட்டில் சொந்த ஊருக்கு கிளம்பினாரா லோகேஷ் கனகராஜ்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உலகநாயகன் கமலஹாசனை வைத்து 'விக்ரம் ' என்கிற படத்தை இயக்க உள்ளது உறுதியாகியுள்ள நிலையில்... தற்போது கதையில் சில மாற்றங்களை செய்ய சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
'மாநகரம்', 'கைதி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகியது.
படம் ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் சுமார் 200 கோடி வசூல் சாதனை செய்தது. மேலும் கொரோனா அச்சத்தின் நடுவிலும் பல திரையரங்கங்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் கமலஹாசனை வைத்து 'விக்ரம்' என்கிற படத்தை இயக்க தயாரானார் லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசனின் பிறந்தநாள் ட்ரீட்டாக, விக்ரம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனைத்து அசைவ உணவுகளையும் வைத்து டீசரை பார்க்க வைத்தே வித்தியாசமாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த கமல். கர்ஜனை குரலில் ஆரம்பிக்கலாமா என மிரட்டி, இரு கோடரிகளை தூக்கி எறிவது போன்று இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் கமல், தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் படப்பிடிப்பு பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றொரு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இடையில் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது உடல் நலம் தெரியுள்ளார். இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.
விரைவில் படப்பிடிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், உலகநாயகன் கமலஹாசனுடன் அமர்ந்து 'ஆரம்பிக்கலங்களா' என ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்திற்காக எழுதிய கதையில், சில மாற்றங்கள் செய்ய சொல்லி கமல் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
இதனால் செம்ம அப்செட் ஆன லோகேஷ் கனகராஜ், ஸ்கிரிப்டிங் பணிகளுக்காக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரியவரும்.