MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆண்டவருக்கே அல்வா கொடுத்துட்டாங்க... தேசிய விருதை மிஸ் பண்ணிய தமிழ் படங்கள் ஒரு பார்வை

ஆண்டவருக்கே அல்வா கொடுத்துட்டாங்க... தேசிய விருதை மிஸ் பண்ணிய தமிழ் படங்கள் ஒரு பார்வை

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் அடைந்த படங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 16 2024, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vikram Movie Kamal

Vikram Movie Kamal

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அதிலும் இந்த ஆறு விருதுகளையும் இரண்டு தமிழ் படங்கள் தான் வென்றுள்ளன. அதில் ஒன்று மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1. அப்படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மற்றொன்று தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kamalhaasan with Anbarivu

kamalhaasan with Anbarivu

இதில் மேலும் சில தமிழ் படங்களுக்கும் விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் ஒன்று தான் கமல்ஹாசனின விக்ரம் திரைப்படம். இப்படத்திற்கு சிறந்த ஸ்டண்ட் மாஸ்டருக்கான விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த விருது கேஜிஎப் 2 படத்துக்கு வழங்கப்பட்டது. இதில் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு படங்களுக்குமே ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியது அன்பறிவு தான். 

இதையும் படியுங்கள்... 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : நச்சுனு 4 தேசிய விருதுகளை தட்டிதூக்கிய பொன்னியின் செல்வன் 1

34
Gargi Movie Sai Pallavi

Gargi Movie Sai Pallavi

அடுத்தபடியாக கன்பார்ம் நேஷனல் அவார்டு ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு படம் கார்கி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு அவ்விருது வழங்கப்பட்டது. 

44
Rs Shivaji

Rs Shivaji

அதேபோல் கார்கி படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்த மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜிக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. ஒருபுறம் 6 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் இதுபோன்ற தரமான படங்களுக்கு விருதுகள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றத்தை தருவதாக நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாய் பல்லவி
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved