'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு 2 விருதுகள்; சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நித்யா மேனன்!
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
70th National Award
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
Thiruchitrambalam Movie
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய குழு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்த அதற்காக விருதுகளை வழங்குகின்றன. இந்திய அளவில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படும் இந்த தேசிய விருதை வாங்க வேண்டும் என்பது திரை உலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவாக உள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளுக்கும் , பிராந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
Best Actress Nithya Menen
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது சற்று முன் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கிய 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே' பாடலுக்கு கொரியாகிராஃப் செய்த ஜான் மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோர் பெற்றுள்ளனர். தேசிய விருது வாங்கிய பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Thiruchitrambalam won 2 National Award
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை, கலாநிதிமாறன் தயாரித்திருந்தார். 50 முதல் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் 110 கோடி வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.