- Home
- Cinema
- கமல் முதல் பிரபுதேவா வரை... கல்யாணம் ஆன பின்பும் நடிகைகளுடன் டேட்டிங் செய்த பிரபலங்களின் லிஸ்ட் இதோ
கமல் முதல் பிரபுதேவா வரை... கல்யாணம் ஆன பின்பும் நடிகைகளுடன் டேட்டிங் செய்த பிரபலங்களின் லிஸ்ட் இதோ
சினிமா பிரபலங்கள் பலர் திருமணம் ஆன பின்னரும் வேறு நடிகைகளுடன் நெருங்கிப் பழகி டேட்டிங் செய்து வந்துள்ளனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஒரு காதல் மன்னன் என்பது அனைவரும் அறிந்ததே. பல நடிகைகளுடன் இவர் டேட்டிங் செய்துள்ளார். இவர் வாணி கணபதி என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 24. பின்னர் சரிகாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக வாணியை விவாகரத்து செய்துவிட்டு சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பின்னர் கவுதமி உடன் கமல் நெருக்கம் காட்டியதை அடுத்து சரிகா விவாரத்து பெற்று பிரிந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவுதமியும் கமல் உடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை முறித்துக்கொண்டார்.
போனி கபூர்
தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்தவர் போனி கபூர். பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் இவர் கடந்த 1984-ம் மோனா கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் நடிகை ஸ்ரீதேவியுடன் நெருங்கிப் பழகிய போனி கபூரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் மோனா. திருமணத்துக்கு முன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்தபோதே ஸ்ரீதேவி கர்ப்பமானார். இதையடுத்து தான் அவரை கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் போனி கபூர்.
இதையும் படியுங்கள்... Parvati Nair: அஜித் பட நடிகை பார்வதி நாயர் சென்னை வீட்டில் திருட்டு!
பிரபுதேவா
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய பிரபுதேவா, கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் நெருங்கி பழகி வந்த பிரபுதேவா, ஒருகட்டத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். ஆனால் அதற்குள்ளேயே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்தனர்.
நாக சைதன்யா
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து நடிகை ஷோபிதா உடன் அவர் நெருங்கிப் பழகி வருவதாகவும், இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஷோபிதா பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... படு மோசமாக போட்டோ சூட் நடத்திய சீரியல் நடிகை..தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்