காத்துவாக்குல ரெண்டு காதல்... இரு நடிகைகளை திருமணம் செய்த டாப் 5 நடிகர்கள் லிஸ்ட் இதோ
சினிமா பிரபலங்கள் காதல் திருமணம் செய்துகொள்வது சகஜமான விஷயமாக மாறிவிட்டது. அப்படி காதலித்து இரண்டு நடிகைகளை திருமணம் செய்துகொண்ட நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.

Actors Who Married 2 Actresses in Real Life
2 நடிகைகளை திருமணம் செய்த கமல்ஹாசன்
இரண்டு நடிகைகளை திருமணம் செய்த நடிகர்கள் பட்டியலில் கமல்ஹாசனும் இடம்பெற்று இருக்கிறார். இவர் முதன்முதலில் நடிகை வாணி கணபதியை 1978-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி 10 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதையடுத்து நடிகை சரிகாவை காதலித்து கரம்பிடித்தார் கமல்ஹாசன். இந்த ஜோடிக்கு அக்ஷரா ஹாசன், ஸ்ருதி ஹாசன் என இருமகள்கள் இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சரிகாவையும் கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
நாக சைதன்யா
நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவும் இரண்டு நடிகைகளை திருமணம் செய்துகொண்டார். இவர் முதலில் நடிகை சமந்தாவை உருகி உருகி காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2021-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து கரம்பிடித்தார் நாக சைதன்யா. இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது.
திலீப்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் திலீப். இவரும் இரண்டு நடிகைகளை திருமணம் செய்துள்ளார். அதில் முதலாவதாக மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியரை கடந்த 1998-ம் ஆண்டு மணந்தார் திலீப். இவர்களுக்கு மீனாட்சி என்கிற மகளும் இருக்கிறார். 2015-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். மஞ்சு வாரியரை பிரிந்த அடுத்த ஆண்டே நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார் திலீப்.
சைஃப் அலிகான்
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது முதல் திருமணம் அம்ரிதா சிங் என்கிற நடிகையுடன் கடந்த 1991-ம் ஆண்டு நடந்தது. இந்த ஜோடிக்கு சாரா அலிகான் என்கிற மகன் இருக்கிறார். அவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 2004-ம் ஆண்டு அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து பிரிந்த சைஃப் அலிகான் கடந்த 2012-ம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
பிரகாஷ் ராஜ்
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக மிரட்டி வருபவர் பிரகாஷ் ராஜ். இவரும் இரண்டு திருமணம் செய்திருக்கிறார். இவரது முதல் திருமணம் லலிதா குமாரி என்கிற நடிகையுடன் கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 2009-ம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்து பிரிந்த பிரகாஷ் ராஜ், 2010-ம் ஆண்டு போனி வர்மா என்கிற நடன இயக்குனரை திரூமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதந்த் என்கிற மகன் இருக்கிறார்.