நண்பனை அடிக்க பயந்த ரஜினி... ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர் இவர்தானா!
ஜெயிலர் படத்தில் வில்லனாக முன்னணி நடிகர் நடிக்க இருந்ததாக ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த நடிகர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
Rajinikanth
ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். படையப்பா படத்தின் ரஜினிக்கு வில்லியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், இப்படம் மூலம் முதன்முறையாக சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதுதவிர ஜாக்கி ஷெராப், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
Rajinikanth
ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆகஸ்ட் 10-ந் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சிலைக்கடத்தலை மையமாக வைத்து ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... வேட்டையன் ராஜா வரார்... சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவித்த ராகவா லாரன்ஸ்
Rajinikanth
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்த இசைவெளியீட்டு விழாவில் சுமார் 45 நிமிடங்கள் பேசிய ரஜினிகாந்த், பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதன்படி இப்படத்தில் வில்லனாக முன்னணி நடிகர் நடிக்க இருந்தது பற்றியும் கூறி இருந்தார் ரஜினி. அந்த நபர் தனக்கு நெருங்கிய நண்பர் என்றும், அவரிடம் என்னை தான் பேச சொன்னார்கள். நான் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். ஆனால் மறுநாள் அவர் வில்லனாக நடித்தால் அடிக்க வேண்டியிருக்குமே என தோன்றியது. உடனே நெல்சனுக்கு போன் போட்டேன் அவரும் அதையே சொன்னார்.
Rajini Kamal
அதன்பின்னர் அந்த நண்பருக்கு அழைத்து இதனை எடுத்துக்கூறினேன், உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என அவரும் பெருந்தன்மையோடு சொன்ன பின்னர் தான் அந்த வில்லன் கேரக்டரில் விநாயகனை நடிக்க வைத்தோம் என பேசி இருந்தார். ரஜினி அடிக்க பயந்த அந்த நண்பர் வேறுயாருமில்லை, நம்முடைய உலகநாயகன் கமல்ஹாசன் தான். இதை அறிந்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தால் செம்ம மாஸ் ஆக இருந்திருக்குமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஃபிரெண்ட்ஷிப் டே அதுவுமா... விஜய் ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் பண்ணிய வெங்கட் பிரபு