வேட்டையன் ராஜா வரார்... சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவித்த ராகவா லாரன்ஸ்
பி.வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, மாளவிகா, வடிவேலு, நாசர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் சாதனை படைத்ததோடு வசூலையும் வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். பி.வாசு தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இதில் சந்திரமுகியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், வடிவேலு, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... சாதி வெறி பிடித்தவனை சகட்டுமேனிக்கு கொண்டாடும் நெட்டிசன்கள்... மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்
சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூலை 31) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ரஜினியை போல் ராகவா லாரன்ஸும் மாஸான லுக்கில் வருவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஃபிரெண்ட்ஷிப் டே அதுவுமா... விஜய் ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் பண்ணிய வெங்கட் பிரபு