ஃபிரெண்ட்ஷிப் டே அதுவுமா... விஜய் ரசிகர்களை ஏப்ரல் ஃபூல் பண்ணிய வெங்கட் பிரபு
தளபதி 68 அப்டேட்டுக்காக ஆவலோடு காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு போட்ட டுவிட்டால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் 19-ந் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. லியோ படம் ரிலீஸாகும் முன்னரே விஜய்யின் அடுத்த படம் குறித்த அப்டேட்டும் வெளியாகிவிட்டது. அதன்படி விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார் என்கிற அப்டேட்டை கடந்த மே மாதமே படக்குழு அறிவித்துவிட்டது.
இதனால் தளபதி 68 படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி கடந்த ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று தளபதி 68 பட டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நேற்று வெங்கட் பிரபு ஒரு டுவிட் ஒன்றை போட்டிருந்தார். அதில் அவர் சேரில் அமர்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இன்று டிவியில் ஒளிபரப்பாக உள்ளதா? தொலைக்காட்சியில் இன்று என்ன ஸ்பெஷல்?
அந்த புகைப்படத்தின் வெங்கட் பிரபு முன் இருந்த டிவிகளில் வெங்கட் பிரபு பாலிடிக்ஸ், வெங்கட் பிரபு ரீயூனியன் என மாநாடு மற்றும் சென்னை 28 பட கேப்ஷன்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் அப்போ தளபதி 68 படத்தின் கேப்ஷனை தான் இன்று வெளியிடப்போகிறார் போல என நினைத்து ஆவலோடு காத்திருந்தனர். ஆனால அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவர் இன்று காலை வெளியிட்ட அப்டேட் என்னவென்றால், அவர் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அனந்த் இயக்கி உள்ளார். நட்பை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் யூடியூபர் இர்பான், குக் வித் கோமாளி பாலா, விடுதலை பட ஹீரோயின் பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இன்று பிரெண்ட்ஷிப் டே என்பதால் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.
வெங்கட் பிரபுவின் இந்த டுவிட்டை பார்த்து அப்செட் ஆன ரசிகர்கள், பிரெண்ட்ஷிப் டே அதுவுமா இப்படி ஏப்ரல் ஃபூல் பண்ணிட்டீயே நா என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சாதி வெறி பிடித்தவனை சகட்டுமேனிக்கு கொண்டாடும் நெட்டிசன்கள்... மாரி செல்வராஜுக்கு தலைவலியாக மாறிய பகத் பாசில்