- Home
- Cinema
- தக் லைஃப் விழாவில் கமல் அழுத்தி சொன்ன ‘அந்த’ சொல்; சிம்புவை அரசியலுக்குள் இழுக்கிறாரா ஆண்டவர்?
தக் லைஃப் விழாவில் கமல் அழுத்தி சொன்ன ‘அந்த’ சொல்; சிம்புவை அரசியலுக்குள் இழுக்கிறாரா ஆண்டவர்?
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சிம்புவை பார்த்து சொன்ன ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kamalhaasan Speaks About Simbu
நடிகர்கள் கமல்ஹாசனும், சிம்புவும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. தக் லைஃப் படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதன் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்னம், திரிஷா, சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவுமே கலந்துகொண்டது.
சிம்புவிடம் கமல் சொன்ன அந்த சொல்
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “தம்பி STR போகப்போகும் தூரம் எனக்கு தெரிகிறது. உங்களுக்கு கடமை இருக்கிறது. இந்த ரசிகர் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த பொறுப்போடு இனிமேல் நீங்கள் நடந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஏற்கனவே பொறுப்போடு தான் இருக்கிறீர்கள். அந்த பொறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. அது சுமையல்ல... சுகம். அந்த சுகத்தை அனுபவியுங்கள். அதைப்பார்த்து நானும் அனுபவிப்பேன்” என கூறினார்.
சிம்புவை அரசியலுக்கு இழுக்கிறாரா கமல்?
கமலின் இந்த பேச்சில் அவர் சிம்புவை பார்த்து நீங்கள் தலைவன் என சூசகமாக சொன்னது அவர் அவரை அரசியலுக்குள் இழுக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் கமலை விட அதிகமானது. இது தக் லைஃப் விழாவிலேயே தெரிந்தது. அவர் பேசினாலே அரங்கம் முழுதும் கைதட்டல்களும் விசில்களும் பறந்தன. அதை நோட் பண்ணி தான் கமல் அவரிடம் அரசியல் ஆசையை தூண்டும் விதமாக பேசியிருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
விஜய்க்கு போட்டியாக சிம்பு?
ஏற்கனவே தமிழக அரசியலில் கமல் பார்ம் அவுட் ஆகிவிட்டார். அவரின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுகவில் ஐக்கியம் ஆனதில் இருந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறது என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக கட்சி தான் டிரெண்டிங்கில் உள்ளது. ஒரு வேளை அவருக்கு போட்டியாக சிம்புவை அரசியலில் இறக்கிவிட முயல்கிறாரா கமல் என்கிற கேள்வியும் அவரின் இந்த பேச்சுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது. ஆனால் சிம்பு தன்னுடைய அரசியல் ஆசையை இதுவரை வெளிப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.