40 வருடத்துக்கு முன்பே பார்ட் 2 டிரெண்டை உருவாக்கிய கமல்; முதல் பார்ட் 2 தமிழ் படம் எது தெரியுமா?
First part 2 Movie in Tamil : 2ம் பாகம் படங்கள் தற்போது அதிகளவில் வந்தாலும் அதற்கெல்லாம் 40 வருடத்திற்கு முன்பே பிள்ளையார் சுழி போட்டவர் உலகநாயகன் கமல்ஹாசன் தான்.
Kamal Haasan
ஒரு படம் ஹிட் ஆனால் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது. இந்த டிரெண்ட் கோலிவுட்டில் எடுபடவில்லை. ஏனெனில் இங்கு வெளிவந்த எந்திரன் 2, இந்தியன் 2, சூதுகவ்வும் 2, பொன்னியின் செல்வன் 2 என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அதேவேளையில் தெலுங்கில் பாகுபலி 2, புஷ்பா 2 என பார்ட் 2 படங்களெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகின்றன.
First part 2 Movie in Tamil
அதேபோல் கன்னடத்தில் கேஜிஎஃப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படி பார்ட் 2 டிரெண்ட் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வரும் நிலையில், முதன்முதலில் இந்த டிரெண்டை உருவாக்கியவர் கமல்ஹாசன் தான். தமிழ் சினிமாவில் புதுப்புது முயற்சிகளை எடுத்து நடிக்கும் நடிகர் கமல்ஹாசன், பார்ட் 2 டிரெண்டை 40 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முதல் இரண்டாம் பாக படம் கடந்த 1984-ம் ஆண்டு வெளிவந்தது.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் பட ரீமேக்கில் போட்டிபோட்டு நடித்து வசூல் வேட்டையாடிய ரஜினி, கமல் - என்ன படம் தெரியுமா?
Kalyanaraman
அப்படத்தின் பெயர் ஜப்பானில் கல்யாண ராமன். இப்படத்தின் முதல் பாகமான கல்யாணராமன் திரைப்படம் 1979-ம் ஆண்டு திரைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக 1984-ம் ஆண்டு ஜப்பானில் கல்யாண ராமன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. கல்யாணராமன் திரைப்படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் கமல்ஹாசன் கல்யாண், ராமன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Jappanil Kalyanaraman
அதன்பின்னர் அதன் இரண்டாம் பாகமான ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ஆனால் இப்படம் தோல்வியை சந்தித்தது. கல்யாண ராமன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் ஹீரோயினாக ராதா நடித்திருந்தார். இன்று பார்ட் 2 படங்கள் போட்டிபோட்டு உருவாவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய கல்யாண ராமன் படம் மூலம் பிள்ளையார் சுழி போட்ட கமல், அதைத்தொடர்ந்து, இந்தியன் 2, விஸ்வரூபம் 2 போன்ற பார்ட் 2 படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமே தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... “திருமணமான முதல் நாளே அது தெரிஞ்சுடுச்சு.. ” வாணி கணிபதி உடனான விவாகரத்து குறித்து கமல் ஓபடன் டாக்!